பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை ' கன்னத், போருள் சரும் தமிழே நீ ஒர் பூக்காடு; Fானேர் அம்பி'என்ருர் புதுவைக் கவிபாாதி தாசன் அவர்கள். தமிழ் இலக்கியப் பூங்காவில் எராளமான நறுமலர்கள் இருக் கின்றன; தமிழ் இளைஞர்கள் யாவரும் தும்பிகளாக ஆக வேண்டும் என்பதே இந்த நூலாசிரியரின் நோக்கம். எங்கள் நோக்கமும் அதிவே. எவரும் எளிதில் படிப்பதற்கேற்றவாறு நூல் எளிய இனிய நடையில் அமைந்திருக்கிறது. தமிழ் இலக்கியப் பூங்காவில் செல்ல முடியாத இடங்களுக்கும் மக்களைக் கூட்டிச் செல்ல வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அந் நோக்கத்தை ஒரளவு o இந் நூல் முற்றுவிக்கிறது. தமிழ் ஆர்வம் மிக்க மாணவர்களுக்கு இந்நூல் ஒரு அரிய விருத்தாக இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை. மாணவர்களின் மனப் பக்குவங்களை யெல்லாம் அனுபவத்தில் நன்கு அறிந்த இத் நூலாசிரியர் அவர்கள் மனேநிலைக்கேற்றவாறு நடையையும் கட் இசைகளின் போக்கையும் அமைத்திருக்கிருர் என்றே சொல்ல வேண்டும். இத்தால் மாணவர்கட்குத் தமிழ் இலக்கியத்தில் ஒரு ஆசையை ஊட்டும் என்பதற்குத் தடையில்லை. எங்கள் பதிப்பகத்தின் முதல் நூலாக இந்நூல் வெளி வருகிறது. பொதுவாகத் தமிழ் மக்களையும், சிறப்பாகத் தமிழ் ஆர்வம் மிக்க மாணவர்களையும் எங்களை இப்பணியில் ஊக்குவிக்கு மாறு வேண்டுகிருேம். - கலைவளர்ச்சிப் பதிப்பகத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/6&oldid=781710" இலிருந்து மீள்விக்கப்பட்டது