பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஏலேலோ ஐலலோ

பாட்டுக்கு ஒரு அற்புதமான சக்தி இருக்கிறது. அது உள்ளத்தை நெகிழ வைக்கிறது. கரையாத மனத்தையும் கரையச் செய்கிறது. கடவுளே பாட்டில் உருகி விடுவதாகச் சொல்லுகிறார்கள்.

சிரமப்பட்டு வேலை செய்யும் உழைப்பாளி பாடிக் கொண்டே வேலை செய்கிருன். அதனல் அவனுடைய சிரமம் குறைகிறதை அவன் உணர்கிருன்.

படகு தள்ளுகிறவன் பாட்டுப் பாடுகிருன். அவனுக்கும் தனது வேலையிலே இன்பம் பிறக்கிறது. படகிலே செல்லுகின்றவர்களும் அவன் பாட்டிலே லயித்து இன்பமடைகிறார்கள்.

ஒடப் பாட்டு என்று பல பாடல்கள் தமிழிலே இருக்கின்றன. ஏலேலோ ஐலலோ என்றும், ஏலேலோ ஏலலிலோ என்றும் அந்தப் பாட்டுக்களில் அடிக்கடி வரும். கேட்பதற்கு இன்பமாக இருக்கும்.