பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மழைக் கஞ்சி

ழையின் அவசியத்தை எல்லோரும் உணர்ந்திருக்கிறோம். அது உயிர்களைக் காக்கும் வானமுது. மழை இல்லாவிட்டால் விளைவு இல்லை; அறுவடை இல்லை. உணவு இல்லை. பசிப்பிணியால் வாடி மக்கள் மடிய வேண்டியது தான். மழையே வாழ்விற்குப் பிரதானம் என்பதை நிலத்தை உழுது, தாமும் உண்டு, உலகத்திற்கும் உண வளிக்கும் குடியானவர்களே மிக நன்கு உணர்வார்கள்.

பருவத்தில் மாரி பெய்யாது போனல் நிலம் வரண்டு விடுகிறது. பசும்புல் அற்றுப் போய் விடுகிறது. கால் நடைகள் வாடுகின்றன. மக்கள் வயிறு காய்கின்றது. உழவன் இதைக் கண்டு வருந்துகிருன்: உழத்தி சோர் வடைகின்ருள்.

மழை பெய்யுமா, நாடு செழிக்குமா என்று ஆவலோடு குறி கேட்கிறார்கள். மழைப் பாட்டுப் பாடிக்கொண்டு யாராவது வருகிரு.ர்களா என்று பார்க்கிருர்கள். அவர்கள் ஒருவரையெருவர் சந்திக்கும்போதெல்லாம் மழையைப்-