பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

காற்றில் வந்த கவிதை

பற்றியே பேசிக் கொள்ளுகிருர்கள். வேற்றுார்களிலிருந்து யாராவது வந்தால் அவரிடம் மழை வளத்தைப் பற்றித் தான் விசாரணை.

சில சமயங்களில் பருவம் கடந்தாவது வானம் பெய்துவிடும். சில சமயங்களில் அதுவும் இல்லாமல் போய்விடும். கொங்கு நாட்டில் சில பகுதிகளில் இப்படி ஏற்படுவது சகஜம். குடிக்கக் கஞ்சி இராது. அதோடு தண்ணீரும் சில ஊர்களில் அற்றுப் போய்விடும். கிணறுகளெல்லாம் வறண்டு கிடக்கும்.

இப்படிப் பெரிய நெருக்கடி ஏற்படும் காலத்தில்தான் மழைக் கஞ்சி எடுக்க வேண்டும் என்று ஊர் மக்கள் முடிவு கட்டுகிருர்கள். ஊரிலுள்ள பெண்களெல்லாம் சேர்ந்து கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்று பிச்சை எடுப்பார்கள். அரிசி, ராகி, சோளம், கம்பு என்று இப்படி எல்லாத் தானியங்களும் கிடைக்கும். அவற்றை எல்லாம் ஒன்ருகச் சேர்த்து அரைத்து மாவாக்கி ஊர்ப் பொது இடத்தில் ஒரு பெரிய பானையில் இட்டுக் கஞ்சி காய்ச்சுவார்கள்.

உப்பு இல்லாத கஞ்சி அது. ஆண் பெண் அனைவருக்கும் வழங்கப்படும். எல்லோரும் அதை அங்கேயே குடித்தானவுடன், பெண்கள் தங்கள் குழந்தைகளை எடுத்துக்கொண்டு பரதேசம் போவதாகப் பாவனை செய்து புறப்படுவார்கள்.

இந்தச் சமயத்தில் அவர்கள் மழையில்லாது படும் கஷ்டங்களெல்லாம் ஒரு பாட்டாக வெளிவரும்.

வருண தேவனைக் குறித்து அந்தப் பெண்கள் புலம்புகிறார்கள். வருணன்தானே மழைக்குக் காரணம்? அதனல் அவனை அடிக்கடி, 'ஐயோ வருணதேவா' என்று கூப்பிட்டுத் தங்கள் முறையீட்டைத் தெரிவிக்கிருர்கள். 'பூமி எந்நாளும் செழித்திருந்து உணவளிக்கும் என்று நம்பி அல்லவா நாங்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்தோம்? இப்-