பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மழைக் கஞ்சி

21

பொழுது மழையில்லாமையால் பூமி செழிக்கவில்லையே, அதனால் எங்கள் மக்கள் வயிறு வாடுகின்றதே" என்று அவர்கள் நெஞ்சம் குமுறுகிருர்கள்.

பூமியை நம்பியல்லோ
      ஐயோ வருண தேவா
புள்ளைகளைப் பெத்துவிட்டோம்
      ஐயோ வருண தேவா
பூமி செழிக்கவில்லே
      ஐயோ வருண தேவா
புள்ளை வயிறு வாடறதே
      ஐயோ வருண தேவா
மானத்தை நம்பியல்லோ
      ஐயோ வருண தேவா
மக்களையும் பெத்து விட்டோம்
      ஐயோ வருண தேவா
மாணஞ் செழிக்கவில்லை
      ஐயோ வருண தேவா
மக்கள் வயிறு வாடறதே
      ஐயோ வருண தேவா

[புள்ளைகள்-பிள்ளைகள்; மானம்-வானம்: ம ைழ. பெத்து-பெற்று.]

உயிர்களை எல்லாம் காப்பாற்றும் உழவன் இன்று முகம் சோர்ந்து நிற்கிறான். உழத்தியர்கள் உணவுக்காக வேலியில் வறண்டு போகாது தப்பி இருக்கும் ஒன்றிரண்டு தழைகளைப் பறித்து விரலெல்லாம் கொப்புளித்துப் போய்விட்டார்கள். வருணதேவனுக்கு இன்னும் கருணை இல்லையா?