பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

காற்றில் வந்த கவிதை

சின்னக் கிணத்திலே பாம்படிச்சுச்
      சிங்காரத் தோப்பிலே வேட்டையாடி
வேட்டை யாடித்தானே வீட்டுக்கு வந்தார்கள்
      அண்ணன்மார் வந்தார்கள் தண்ணிர்கொடு.

அதற்கு மேலே விஷமம் தொடங்குகிறது. அத்தை மகனைக் கிண்டல் செய்கிருள் கும்மிப் பாட்டிலே.

நெல்லு விளஞ்சதைப் பாருங்கடி நெல்லுச் சாய்ந்ததைப் பாருங்கடி நேத்துப் பிறந்த அத்தை மகனுக்கு மீசை முளைச்சதைப் பாருங்கடி ஆத்திலே தண்ணிதான் ஓடாதா ஆராக் குஞ்சுதான் மேயாதா நேத்துப் பிறந்த அத்தை மகனுக்கு மீசை முளைச்சதைப் பாருங்கடி

[விளஞ்சதை-விகளந்ததை. நேத்து-நேற்று முளைச்சதை-முளைத்ததை, ஆத்திலே-ஆற்றிலே. தண்ணி தான்-தண்ணீர்தான். ஆராக்குஞ்சு-ஆரா என்னும் ஒரு வகை மீனின் குஞ்சு.]

இதைக் கேட்டதும் அத்தை மகனுக்கு ரோசம் வந்து விட்டது. அவனும் பதிலுக்குப் பாட ஆரம்பிக்கிருளும். அதுவும் கும்மிப் பாட்டுத்தான்.

கும்மி யடிக்கிற பெண்டுகளா ஒரு
கோளாறு சொல்லுறேன் கேளுங்கடி
அம்மியைத் தூக்கி மடியில் கட்டி
ஆழக் கிணற்றில் இறங்குங்கடி

[கோளா று-சூழ்ச்சி. கிணத்தில்-கிணற்றில்.]