பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எங்கள் முத்துமாரி

நாடோடிப் பாடல் எளிமையான சொற்களாலும், பேச்சு வழக்குச் சொற்களாலும் ஆனது. அதன் நடை எளிமையாக இருப்பது போலவே அதன் இசையும் எளிமையாகவே இருக்கும். அதைப் பாடும் மக்களின் உள்ளத்தைப் போலவே அது எளிமையானது.

எளிமையானது என்பதால் அது உள்ளத்தைக் கவராது என்று நினைக்கக்கூடாது. எளிமைக்கே ஒரு தனிக் கவர்ச்சி உண்டு. அதனல்தான் ரவீந்திரநாத தாகூர் போன்ற கவிஞர்கள் நாடோடிப் பாடல்களின் இசையமைப்பைத் தங்களுடைய பாடல்கள் சிலவற்றில் கையாண்டிருக்கிருர்கள்.

தமிழ்க் கவிஞர்களும் இவ்வாறு கையாண்டதுண்டு. ஆநந்தக்களிப்புப் போன்ற பண்டாரப் பா ட் டி ன் மெட்டிலே உயர்ந்த ஞானப் பாடலைத் தாயுமானவர் பாடியிருக்கிருர். சித்தர்களுடைய பாடல்கள் பல எளிய இசை யமைப்பையே கொண்டிருக்கின்றன.

தாந்திமித்திமித் தந்தக் கோனாரே
தீந்திமித்திமித் திந்தக் கோனாரே