பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

காற்றில் வந்த கவிதை

பள்ளி விரலைக் காட்டினல் நிற்குமாம் அந்தயானை
-என்தோழி பெண்டுகளே எடுங்கடி குலவைகளே

திருமண வைபவத்திலே மற்றும் ஒர் காட்சி. பல்லக்குகள் வருகின்றன. மேலே சிவிகைகள் நிழல் செய்கின்றன. நாட்டிய மாடுகிருர்கள். நாகசுர ஒலி இன்பமாக எழுகின்றது. கோலாகலத்தோடு சிரித்த முகங்காட்டி மாப்பிள்ளை தம் அத்தை மகளான புது மணப் பெண்ணுடனேவருகிருர். இந்தக் காட்சியைப் பள்ளிகள் மற்ருெரு பாட்டிலே வருணித்துக் குலவை பாடுகிறார்கள்:

பல்லக்காம் பல்லக்காம் பொன்பதைத்த பல்லக்காம்
ஆலத்தி ஒருபுறமாம் அங்கே பல சிவிகைகளாம்
நாட்டியங்கள் ஆடிவர நாகசுரம் ஊதிவர
தேவேந்திரப் பள்ளிகளும் தேன்போலப் பாடிவர
அத்தை மகளுடனே சிரித்து முகம் கொடுத்து
நம்ம ஊர்ப் பண்ணையார் சீமையாள வாரார்கள்
-என்தோழி பெண்டுகளே எடுங்கடி குலவைகளே

இவ்வளவு சிறப்பெல்லாம் கூறிக் குலவை பாடுகின்ற பெண்களுக்கு நல்ல பரிசுகள் கிடைக்காமலா போகும்?