பக்கம்:குறும்பா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

கோவேந்தன்


 கற்பனையின் பரி கிடைத்தால் கோடி
 காவியங்கள் படைத்திடுவேன் பாடி,
 விற்பதெங்கே விளைவதெங்கே
 விலையும் என்ன விளம்பீர் என்றான்
 சொற்களஞ்சிய எதுகைமோனை தேடி!

அனைத்துஉயிரும் கடவுள் என்றான் கீரன்
ஆண்டவனே வடிவுகொண்ட ஈரன்;
முனைந்துசொன்ன நேரத்திலே
மூட்டைப்பூச்சி, கொசு கடிக்கச்
சினந்தழித்தான் முணங்கிக்கொண்டே வீரன்!

இடைவெளியைக் காட்டிநின்றாள் சிறுக்கி;
எழுத்தாளன் கதையளந்தான் கிறுக்கி;
எதையும் பணம் ஆக்குகின்ற
எத்துமுத லாளிக்காகப்
படம் எழுதித் தந்தான் ஒரு பொறுக்கி!

இளங்கோ,கம்பன், வில்லி வள்ளல் கூடி
ஏனோ வந்தார், அலைந்தார் வேலை தேடி—
நிலைமைஇது:'புலவர்தேர்வில்
நிலைத்தால்தான் வேலை' என்றார்
அளவில் தொலை சென்றார் அவர் ஓடி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/13&oldid=1200724" இலிருந்து மீள்விக்கப்பட்டது