பக்கம்:குறும்பா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறும்பா

13


சாதிமதக் கட்டெதிர்த்து நின்றான்
‘சாதலடி காதல்இன்றேன்’ என்றால்;
ஒதுபணக் காரப்பெண்ணாள்
உறவுவர மனம் திரிந்தான் ---
தாதை சொல்லை மீறல்குற்றம் என்றான்!



ஊர்ப்பொருளைத் தன்பொருளாய்ச் சேர்த்தான்
ஒருவருக்கும் கொடுக்காமல் காத்தான்;
சார் குடிக்கும் கூத்திக்குமாய்ச்
சழக்கரசுக்கு ஈகையிலே
நேர்புரட்சி வந்தது பார், வேர்த்தான்!



ஞாயிற்றொளி எழுந்ததுவே கீழ்ப்பால்
நல்ல ஒளி பரவியது மேற்பால்.
ஆயினும் நம் வவ்வால்களும்
குருடர்களும் ஐயோ ஒளி
பாயவில்லை எனப்புலம்பும் ஒர்பால்!



திருடன் திருடன் என்று குரல் தந்தான்
தெருவில் சென்றோன் துணைபுரிய வந்தான்;
'இருப்பதினைக் கொடுத்துவிடு,
இல்லையென்ருல் மாள்வாய்’ என்று
‘திருடன்’ குரல் தந்தவனே நின்றான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/16&oldid=1201203" இலிருந்து மீள்விக்கப்பட்டது