பக்கம்:குறும்பா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

கோவேந்தன்


பாவமன்னிப்பு வேண்டும் என்றாள் மாது,
பாதிரியார் ஒப்புக்கொண்ட போது....
பாவம்செய்வோம் இருவருமே
பரம்பிதா மன்னிப்புண்டே
நீ வருவாய்’ என அணைத்தார், தோது!\



பூனைக்குச் சிறகுகளை இணைத்தான்
புரவிக்குக் கொம்புகளைப் பிணைத்தான்...
வானில் ஒரு பறவையில்லை
மண்ணில் மாந்தர் நிற்கவில்லை
ஏன் இதனைச் செய்தோம் என்று நினைத்தான்.



வஞ்சனையின் வடிவமான முத்து
வாயடியும் கையடியும் கற்று
விஞ்சி நின்றான் கவியரசாய்
விளம்பரத்தை நாளும்செய்து
வஞ்சமகள் போல மானம் விற்று!



திருமறைகள் ஓதிஓதிப் பார்ப்பான்
திருடிப்பொருள் அத்துணையும் சேர்த்தான்.
ஒருநாள் அவன் கனவினிலே,
‘உத்தவம்செய் நமக்கு’ என்றதும்
உருவம் உயிர் இறைக்கேதென்று வேர்த்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/17&oldid=1195806" இலிருந்து மீள்விக்கப்பட்டது