பக்கம்:குறும்பா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
26
கோவேந்தன்

புத்தோவியக் காட்சி வைத்தான் கலைஞன்
பொருள்படைத்தார்க்கு அழைப்புவிடுத்தான்
விலைஞன்,
சித்தாளாகும் திறமையற்றும்
திறந்து வைத்தான் கலை அமைச்சன்
பித்துப்பிடித்து வெளியில் வந்தான் கொலைஞன்;

O

கண்கள் இலாச் செவிட்டூமைச் சாத்தான்
கவிதை கவிதை என்றெதையோ யாத்தான்;
பெண், ஆண், அற்ற அலியறிஞன்
பிறந்து விட்டது 'புதுக்கவிதை'
என்று புகழ்க் கானல் நீரில் நீத்தான்!

O

பத்தில் இரண்டு நல்லதென்றான் சோழன்
பார்க்க வேண்டும் அவற்றை என்றான் தோழன்.
செத்ததொன்று, சாகக்கிடக்கும்
சிறப்பு இரண்டு-மற்றதெல்லாம்
பித்தலாட்டப் பேய்கள் என்றான் வேழன்!

O

எச்சில் இலைக்கு ஏங்குசில நாய்கள்
‘இதழ்மனையில்' இடம் பிடித்த பேய்கள்:
நச்சுமனக் கக்கல், அன்றி
நல்ல கருத்து ஏற்றிடாத
பொச்சரிப்புத் தாய், பொறாமைச் சேய்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/29&oldid=1461746" இலிருந்து மீள்விக்கப்பட்டது