பக்கம்:குறும்பா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறும்பா

31


மனநோய் மருத்துவமனையில் ஒருநாள்
மாண்புகளே கலந்து கொண்ட திருநாள்
என்ன நடந்ததோ அறியேன்
இருந்த நாட்டின் குழப்பம் நீங்கிக்
கனவுப் பொது வுடைமை வந்தது மறுநாள்!



மூன்று தமிழ் எழுத்தாளர் கூடி
முத்தமிழ்க்கும் தாமே உயிர் நாடி
போன்றுரைத்தார், இருவர் செல்லப்
"பொய் எதற்கு? நானில்லையேல்
சான்றே"தென்றார் தனித்து நின்ற தாடி!



நீச்சலுடையில் நடிக்கமாட்டேன் என்றாள்
நெறி பிழையாக் கற்பினள் போல் நின்றாள்.
பேச்சொழித்துப் பணம் எடுத்தார்...
பேசவில்லை திரைநடிகை
நீச்சலுடையும் அவிழ்த்து அவரை வென்றாள்!



காந்திதலை நாணயத்தைப் பார்த்தான்
கள்ளருந்த மனமின்றி வேர்த்தான்;
ஏந்து மதுக் கொணர்ந்தவரின்
எண்ணம்வர, நேருதலை
போந்த பணம் தந்து கள்ளைச் சேர்த்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/34&oldid=1200899" இலிருந்து மீள்விக்கப்பட்டது