பக்கம்:குறும்பா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

கோவேந்தன்


தொலைக்காட்சி என்றொலிக்கச் சொன்னேன்
தொல்லைக்காட்சி என்று பேரன் சொன்னான்;
பலுக்கினான் வானொலியை
வீணொலி என்று ஆர்வமுடன்
நிலையத்துண்மை அறிந்தென்னையே வெறேன்!



பாம்பனைத்தும் வடிவம் ஒன்று போலே
பாராளுவோர் அமைச்சர் என்பதாலே
நாம் மகிழ்ந்தோம் வாக்களித்தோம்
நச்சு மனப்பான்மையினார்
தாம் யார் என்று காட்டிவிட்டார் மேலே!



சந்தனக்காட்டை கடந்துவரும் காற்று
தழுவும் மணம் குளிர்ச்சி மருவும் ஊற்று!
சிந்தனைக்காகும் செந்தமிழ்ப்பாட்டு
சிலிர்த்தெழுந்த புரட்சிக்குப்பின்
தந்து மகிழும் இன்னலத்தின் நாற்று!



களிற்றுயானை மீதிருந்தான் செல்வன்
கழனியெல்லாம் பாழ்படுத்தினான் கள்வன்:
பிளிற்று வண்ணம் தோட்டிகொண்டு
பெருமிதத்தால் குத்திவிட்டான்
பழிக்குப்பழி வாங்கிவிட்டது கொம்பன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/37&oldid=1200995" இலிருந்து மீள்விக்கப்பட்டது