பக்கம்:குறும்பா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

கோவேந்தன்


திரை நடிகை ஒருத்தியுடை தளுக்கில்
தேர்தலிலே அரசமைத்தான் குலுக்கில்:
கரையிலாத பாஞ்சாலியால்
கட்சிக்குள்ளே ஆயிரம் நோய்,
விரைந்துவிட்டில் விழுந்ததடா விளக்கில்!



கொலைக்குக் கொலை நடந்துவிட்ட போது
கொலைப்படையை ஏவி விட்டான் கேது:
கொலைக்களங்கள் காணுவதில்
கோமகன்கள் காந்திபேரால்
நிலைத்துவிட்டார் நாய்நரிக்குத் தோது!



இனங்கள்பல மொழிகள் பல நாட்டில்
இணக்கம்இலா ஒருமைப்பாட்டுக் கோட்டில்
தனக்குள் பொதுமைக் கொள்கையிலாத்
தலைகொழுத்தார் வந்ததினால்
முனைப்பொற்றுமை பறக்குதடா காற்றில்!



உயிர் துறந்தாள் நாட்டுக்காகத் தாயார்
உலகம் சுற்றினான் தீரா நோயால் சேயார்;
உயிர்பிரிந்த தாயை அறியான்
அறிந்தால் உயிர் பிரிந்திடுமாம்
பயல் இவனுக்கு நிகரும் உண்டோ தீயார்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/41&oldid=1201062" இலிருந்து மீள்விக்கப்பட்டது