பக்கம்:குறும்பா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

கோவேந்தன்


சமயம் என்றால் என்னவென்றான் திண்ணன்
சமுக்கர் நச்சு வலையே என்றான் கண்ணன்.
சமயம் இன்றேல் வாழ்க்கை இல்லை
சாதி, மதம் இறை சமைத்ததென்றான் வண்ணன்,
சமயச்சண்டை; தேர்தல் வந்தால்
சமயத்திற்கு ஒரு கட்சியிலே அவன் அண்ணன்!



உழைக்காது உண்ணத் திட்டமிட்டான் மாரி
ஆளும் கட்சி ஒன்றில் சேர்ந்தான் கோரி;
குழையும் நாயும் தோற்கச் செய்து
கோடைஇடிப் பேச்சாளனாய் மாறி,
நுழைந்துவத்தான் செல்வத்திலே,
நொடிந்து செத்தான்; மனைவி, விபசாரி!



குருதியுறுஞ்சும் கொடிது எது என்றாள் அல்லி
கொசுதான் என்றாள் சிறுமி பவழவல்லி.
இருப்பதிலே முகட்டுப் பூச்சிக்கு
இணையில்லை என்றாள் மற்றோர் செல்லி,
இருக்கிறதே என்று கோதை,
இயம்பினாள்; ‘குருக்களே ஆட் கொல்லி’.


தேனீயை வரவேற்றன பூக்கள்,
செம்மனத்தார் கண்டுவந்தார் பாக்கள்;
ஓநாய் எல்லாம் ஆளவந்ததும்
ஓடியது; ஊர் தெரு அனைத்தும் தீக்‘கள்';
நான் நீ என்று ‘நவகவிதை'
தேவைக்கு எங்கும் திரிந்துவந்தன ஈக்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/49&oldid=1201092" இலிருந்து மீள்விக்கப்பட்டது