பக்கம்:குறும்பா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

தற்காக எழுதுகிறோம், ஏன் எழுதுகிேறாம், யாருக்காக எழுதுகிறோம் என்ற வினா எழுப்பாமலே பலர் எழுதுகின்றனர். எதையும் பணமாக்கும் சிறு முதலாளியம் ‘புலபுலெனக் கலகலெனப் புற்றீசல்’ போல் எழுத்து வடிவ மனத்தையும் விற்பனைக்கு ஆக்குகின்றன. அவர்களுள் ஒருவராகாமல், மக்களின் சிந்தனையில் ஒரு சிலிர்ப்பையும், வாழ்வில் மலர்ச்சியையும் உண்டாக்கும் நூல்களையே வெளியிடுவதில் கண்ணுங் கருத்துமாயிருக்கும் ‘வளர்மதி’ ஜெகநாதன் ‘குறும்பா’வை நல்ல முறையில் வெளியிடுகிறாா். அவர்க்கென் நன்றி.

‘குறும்பா’ முற்பகுதி எழுதி 13 ஆண்டுகளாகின்றன. பிற்பகுதி இவ்வாண்டில் எழுதியது. மறைந்த ‘மஹாகவி’ யின் குறும்பாவே எனக்கு முன்னோடி. அந்த நூலைத் தந்து மகாகவியை அறிமுகம் செய்து வைத்த எம்.ஏ. ரஃமான் அவர்கட்கும், இந் நூலினைப் பார்த்துச் சிறந்த அணிந்துரை தந்த பேரா.ம.இலெ.தங்கப்பா அவர்கட்கும் என் நன்றி உரியதாகுக.

இந் நூலிலுள்ள பெரும்பாலான குறும்பாக்கள் எள்ளலும் ஏசலும், குத்தலும் குடைதலும், கேலியும் கிண்டலும் கொண்டவைதாம். இவ்வகை இலக்கியத்திற்கு என்னைத் தூண்டியவை இரண்டு குறள்கள்.

              நகுதற் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண்
               மேற் சென்று இடித்தற் பொருட்டு.

               இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
               கெடுப்பார் இலானும் கெடும்.

                                
த. கோவேந்தன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/7&oldid=1195714" இலிருந்து மீள்விக்கப்பட்டது