பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

யிலுமுள்ள ஒரு கணுக்கோல் தந்தை வழியிலும் மற்ருென்று தாய் வழியிலும் வந்ததாகும்.

இதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு பார்த்தால் தந்தையின் விந்தணுவிலுள்ள 24 ஜோடிக் கணுக்கோல்களில் ஜோடிக்கொன்றாய் 24 அவருடைய தந்தையிடத்திருந்தும் மற்ற 24 அவருடைய தாயிடத்திருந்தும் வந்தவை என்பது தெளிவாகும். அதேபோல வந்தவையே அண்டத்திலுள்ள கணுக்கோல்களும். இப்படியாக வந்துள்ள 24 ஜோடிக் கணுக்கோல்கள் விந்தணுவோ அல்லது அண்டமோ முதிர்ச்சியடையும்போது ஜோடிக்கொன்ருய்ப் பிரிந்து முதிர்ந்ததில் 24 கனுக்கோல்களே இருக்குமென முன்பு பார்த்தோம். இவ்வாறு பிரிகின்ற அந்த ஜோடிகள் சும்மா பேசாமல் பிரிந்து விடுவதில்லை. தாங்கள் ஒன்றாக இருந்த நட்பின் காரணமாக ஒவ்வொரு ஜோடியும் ஒன்றையொன்று கட்டித் தழுவிக்கொண்டு பிறகு பிரிகின்றன. அப்படித் தழுவும்போது ஒன்றின் மேல் பாகமோ கீழ்ப் பாகமோ அல்லது மத்திய டாகமோ அல்லது வேறு பாகமோ பல சமயங்களில் அறுபட்டு மாறி ஒட்டிக் கொள்ளுகிறது. கணுக்கோல்களின் உருவம் பழையபடியே இருந்தாலும் அவற்றின் ஜீனுக்களில் மாறுதல் ஏற்பட்டு விடுகிறது. இது மிக முக்கியமான விஷயம். இப்படி ஏற்பட்ட மாறுதல்களாலே பாரம்பரியத் தன்மைகள் பலவாறு மாறுபட்டு அமைகின்றன. அவைகளே ஒரே குடும்பத்தில் பிறந்த குழந்தைகளின் உருவ அமைப்பு வேறுபாட்டிற்கும் முக்கியக் காரணமாகின்றன. கணுக்கோல்களின் தழுவலாலே ஜீனுக்கள் எவ்வாறு மாறுபட்டு அமைகின்றன என்பதும், அவை எவ்வாறு குழந்தையின் தன்மையில் வேறுபாடு விளைவிக்கின்றன என்பதும் இன்னும் ஆச்சரியமான விஷ்யங்கள். அவற்றையும் இங்கே விவரிப்பதென்றால் இப்பகுதி மிகப் பெரிதாகிச் சுவை குன்றிவிடும். ஆகவே, இத்துடன் கிறுத்திக் கொள்ளுகிறேன். அதற்கு