பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒடிவிளையாடு பாப்பா

35

உடைந்துப்போன கொட்டாங்கச்சியை எடுத்துத் தொட்டிலிலே போட்டு அதைக் குழந்தையாகப் பாவித்துத் தாலாட்டுவதை நான் கண்டிருக்கிறேன். ஆகையால் சிறிது யோசனை செய்து பார்த்தால் நாமே பல பொருள்களை அவர்களுக்கு உண்டாக்கிக் கொடுத்துவிடலாம். கன சதுரமும், கன செவ்வகமுமான மரக்கட்டைகள், கிளிஞ்சல்கள், ஆற்றிலே பல நிறங்களில் கிடைக்கும் வழு வழுப்பான கூழாங்கற்கள் முதலானவைகளெல்லாம் குழந்தைக்கு இன்பமளிக்கும் விளையாட்டுப் பொருள்களாகும். இன்னும் எத்தனையோ கருவிகளைச் சாதாரணமாகக் கிடைக்கும் வஸ்துக்களைக் கொண்டு நாம் உருவாக்கிவிடலாம். நல்ல பளபளப்பான பச்சை, சிவப்பு முதலிய வர்ணங்களைக் கண்டு குழந்தை மகிழ்ச்சியடைகிறது. அவற்றைப் பூசிய விளையாட்டுப் பொருள்கள் பலவற்றை நாமே செய்து கொடுக்க முடியும்.

வீட்டுக் காரியங்கள் பலவற்றிலே பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென்று குழந்தை விரும்புகிறது. பெருக்குவது, கோலம் போடுவது, காய் நறுக்குவது என்றிப்படிக் காரியங்கள் செய்வதென்றால் அதற்கு ஒரே உற்சாகம். விளையாட்டாகவே குழந்தை அவற்றைச் செய்யும். அவ்வாறு செய்து உதவுவதனால் தானும் பெரியவர்களைப் போலத் தொழில் செய்வதாக உணர்ந்து உள்ளத்திலே, பெருமையடைகிறது. தனக்குப் பல வழிகளிலே பணி செய்யும் தாய்க்குத் தானும் உதவியாகக் காரியம் செய்வதால் இன்பமடைகிறது. கொஞ்சம் பொறுமையோடு குழந்தைக்கு இவ்வித சந்தர்ப்பங்களை அளிக்கவேண்டும்.

"அது சின்னக் குழந்தை அதெற்கென்ன தெரியும்?" என்று சிலர் அடிக்கடி குழந்தையின் முன்னால் பேசுவார்கள். பேசுவதோடு நில்லாமல் குழந்தையைச் சிறு சிறு காரியங்கள் செய்யாமலும் தடுப்பார்கள். இவ்விதம் செய்வது அதன் மன வளர்ச்சின்யத் தடுப்பதாகும். தன்னால்