பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எண்ணித்துணியும் பேராற்றல்

39

ஆகா, நீ மிகவும் பெரிய மனிதன், யோசனை சொல்ல வந்துவிட்டாய் என்று அலட்சியமாகப் பேசினால் அவன் மனம் சுருங்கிப் போய்விடும். பிறகு அவன் தானாக் எண்ணமிடவும் பின் வாங்குவான். அன்போடும், அதுதாபத்தோடும் அவனுடைய யோசனையை ஏற்றுக்கொண்டு ஊக்கமளிக்க வேண்டும். அதிற் குறைபாடிருந்தால் நயமாக அதை மாற்றிக்கொள்ள உதவலாம்.

மேலும் குழந்தைகள் உலகமே வேறு; அவர்களுடைய எண்ணங்களும் தனிப்பட்டவையே; அவற்றைப் பெரியவர்களின் மனப்போக்கோடு வைத்துச் சீர்தூக்கிப் பார்க்கலாகாது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக நாம் சிறு வயதிற் கொண்டிருந்த மனப்போக்கை மறந்து விடுகின்றோம். அப்படி மறந்து விட்டு, இயல்புக்கு மாறாகப் பெரியவர்களின் மனப்போக்கைச் சிறுவர்களிடம் எதிர்பார்க்கின்றோம்.

திருஷ்டாந்தமாக ஒரு சிறிய சம்பவத்தை இங்கு எடுத்துச் சொல்லுகிறேன். ஒருசமயம் பல குழந்தைகள் சித்திரம் வரைந்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் தமதிஷ்டம்போல ஏதாவது படம் போட்டார்கள். ஒரு குழந்தை ஒரு பெரிய எருமையின் படம் வரைந்தது. அது அதோடு நின்றுவிடவில்லை. அந்த எருமைக்குப் பக்கத்திற்கு இரண்டிரண்டாகச் சிறகுகளும் வைத்துவிட்டது. சித்திரம் இயற்கைக்கு மாறுபட்டிருக்கிறதே என்று ஆசிரியருக்குக் கோபம். ஆனால் அந்தக் குழந்தையோ தூங்கி மெதுவாக அசைந்து கடக்கும் எருமை வேகமாக ஆகாயத்தில் பறக்க வேண்டும் என்று எண்ணுகிறது!

மேலும் குழந்தைக்குப் பல பொருள்கள் தோன்றும் விதம் வேறு; பெரியவர்களுக்கு அவை தோன்றும் விதம் வேறு. குழந்தைக்கு மரப்பாச்சி ஒரு குழந்தையாகவே உணர்ச்சிகளை எழுப்புகின்றது. ஒரு குச்சியைக் குதிரை