இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆறுகளின் தோற்றமும் நீளமும்
27
ஆறுகள் | மைல் நீளம் | வடிநிலப் பரப்பு (000) ச.மைல் | சராசரி ஒழுக்கு (000-ச.அடி செக) |
---|---|---|---|
அமேசான் (தென் ஆப்பிரிக்கா) | 4000 | 2368 | 3300 |
காங்கோ (ஆப்பிரிக்கா) | 2900 | 1430 | 4500 |
பரானா (அர்சன்டைனா) | 2200 | 1100 | 970 |
யாங்சீ (சைபீரியா) | 3200 | 700 | 800 |
மிசிசிப்பி (வட அமெரிக்கா) | 4240 | 1258 | 700 |
எலிசி (சைபீரியா) | 3240 | 968 | 700 |
பிரம்மபுத்திரா (இந்தியா) | 1970 | 280 | 620 |
லேனா (சைபீரியா) | 2850 | 920 | 585 |
கங்கை (இந்தியா) | 1860 | 419 | 530 |
மெக்கன்சி (கானடா) | 2510 | 682 | 500 |
ஆப்-இர்ட்டிஷ் (சைபீரியா) | 3550 | 1122 | 400 |
வால்கா (ஐரோப்பா) | 2300 | 563 | 300 |
நைல் (ஆப்பிரிக்கா) | 4160 | 1120 | 56 |
கொலராடோ (வட அமெரிக்கா) | 1,700 | 244 | 23 |
காவிரி (தமிழ்நாடு) | 480 | 28000 சதுர மைல் | |
தென்பெண்ணை (தமிழ்நாடு) | 250 | ||
பாலாறு (தமிழ்நாடு) | 230 | 50000 ஏக்கர் | |
வைகை (தமிழ்நாடு) | 165 | ||
கொள்ளிடம் (தமிழ்நாடு) | 94 | ||
தாமிரவர்ணி (தமிழ்நாடு) | 75 | 1750 சதுர மைல் | |
கெடிலம் (தமிழ்நாடு) | 70 | 10,000 ஏக்கர் |
மேலுள்ள அட்டவணையில் கெடிலத்திற்கு மேலே இருபது ஆறுகளைப் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நோக்கக் கெடிலத்தின் மிக எளிய தோற்றம் தெரியவரும்.
இஃதென்ன புதுமை! இந்த இருபது ஆறுகளுள் முதல் வரிசையில் கொடுக்கப்பட்டுள்ள அமேசான், காங்கோ, மிசிசிப்பி போன்ற ஆறுகளைப் பற்றி நூல் எழுதுபவர்கள் வேண்டுமானால், இப்படி ஓர் அட்டவணையைத் தந்து, “இதோ பாருங்கள்! உலக ஆறுகளை நோக்க இந்த ஆறு எவ்வளவு பெரியது - சிறந்தது என்று அறிந்துகொள்ளுங்கள்!” என்று கூறித் தாங்கள் எடுத்துக்கொண்ட ஆற்றின் பெருமையை வானளாவப் புகழலாம். இதுதான் இயற்கை. ஆனால், கெடில ஆற்றைப் பற்றி நூல் எழுதப் புகுந்தவர், இப்படி ஒர் அட்டவணையைக் காட்டி, கெடிலத்தை அட்டவணையின் அடியில் போட்டு இழிவுபடுத்தி அல்ல அல்ல - சிறுமைப்படுத்திக் காட்டலாமா?