பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

கெடிலக்கரை நாகரிகம்


சென்று இடையேயுள்ள அரியலூர் என்னும் ஊரில் இறங்க வேண்டும். அரியலூருக்குத் தெற்கே ஒரு தோற்றம் ஐந்து அல்லது ஆறு கி.மீ. தொலைவில் மையனூர் இருக்கிறது. அரியலூரிலிருந்து மையனூருக்குச் செல்ல நல்ல சாலையின்மையால் பேருந்து வண்டி (பஸ்) வசதி கிடையாது. ஜீப் வண்டி செல்வதற்கும் வசதி போதாதென்றே சொல்ல வேண்டும். எனவே, கால்நடையாகவோ - கட்டை வண்டியின் துணைகொண்டோதான் மையனுரை அடையவேண்டும். மிதி (சைக்கிள்) வண்டியில் வேண்டுமானால் மிதித்து மிதித்துச் சென்று பார்க்கலாம். கட்டை வண்டியிலோ மிதி வண்டியிலோ மையனூர் வரையுந்தான் போகமுடியும். ஊரையடைந்த பின்னர், கெடிலம் தோன்றும் இடத்தைக் கண்டு பிடித்து வணங்க வேண்டுமென்றால் கால்கள் தெம்பாயிருக்க வேண்டும். வயலிலும் வரப்பிலும் கல்லிலும் முள்ளிலும் - பாறையிலும் புதரிலுமாக மூன்று நான்கு கி.மீ. தொலைவு சுற்றினால்தான் கெடிலத்தின் தோற்றத்தைக் காணமுடியும்.

மையனூர் மலை

மையனூருக்கு அண்மையில் தென்புறத்தில் ஒரு மலை உள்ளது. அது எந்த மலைத்தொடர்ச்சியையும் சேர்ந்ததன்று; தனி மலையே. மையனூர் மலை’ என்பது பெயர். ஒரு தோற்றம் 250 அடி உயரம் இருக்கலாம். அம் மலையைப் பின்வரும் படத்தில் காணலாம்:

இது, மலைக்குக் கிழக்கே நின்று எடுத்த படமாகும். இம் மலையைச் சுற்றி வடக்கும் தெற்கும் x கிழக்கும் மேற்குமாகப் பப்பத்து (10 x 10) கி.மீ. தொலைவு பரப்பளவுக்கு காடும் மலையும்