பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலத்தின் பயணமும் துணைகளும்

43


லிருந்து பிரிந்து, விழுப்புரம் வட்டம், கடலூர் வட்டம் முன்னாள் பிரஞ்சிந்தியாவாகிய புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த சிறுசிறு திட்டுப் பகுதிகள் ஆகியவற்றின் வழியாக ஓடி, கடலூருக்கு வடக்கே சில கல் தொலைவில் மதலப்பட்.டு என்னும் ஊருக்கு அருகில் கடலோடு கலக்கிறது. இந்த மலட்டாற்றுக்கு ‘விருத்த பினாகினி’ என்றும் ஒரு விருதுப் பெயர் உண்டு. பினாகினி என்றால் பெண்ணையாறு. அதிலிருந்து பிரியும் மலட்டாறு விருத்த பினாகினி எனப்படுகிறது. எனவே, கெடிலத்தோடு கலக்கும் மலட்டாற்றை விருத்த பினாகினியினின்றும் வேறு பிரித்துணர வேண்டும்.

துணைக் கால்வாய்கள்

இப்படியாகக் கெடிலத்தோடு இரண்டு துணையாறுகள் கலப்பதன்றி, இடையிடையே கால்வாய்கள் பலவும் வந்து கலக்கின்றன. திருக்கோவலூர் வட்டத்தில் சீக்கம்பட்டு, தாமல் முதலிய ஊர்ப் பக்கத்திலிருந்து ஒரு கால்வாய் வந்து, புத்தனேந்தல் அணைக்கு மேற்கே கெடிலத்தின் தென்கரையில் கலக்கிறது. அடுத்து, பெரும்பாக்கம் ஏரியிலிருந்து கழிவாக வரும் ‘மல்லிகா ஓடை’ என்னும் கால்வாய் அந்தப் பகுதிக்கு அண்மையில் கெடிலத்தின் வடகரையில் கலக்கிறது. அதனை யடுத்துக் கிழக்கே, பரிக்கல் ஏரியிலிருந்துவரும் ‘மாறனோடைக் கால்வாய்’ வடகரையில் கலக்கிறது. அதற்கும் கிழக்கே, திருநாவலூர் ஏரிப் பக்கத்திலிருந்து திருநாவலூர்ச் சிவன் கோயிலின் மேற்கு மதிலையொட்டி வரும் ‘நாவலோடை’ என்னும் திருநாவலூர்க் கால்வாய் அவ்வூர்க்கருகில் வடகரையில் கலக்கிறது. அதற்கும் சில கி.மீ. கிழக்கே, அதாவது, திருவாமூருக்கு மேற்கே 2 கி.மீ. தொலைவில் ‘இராகவன் வாய்க்கால்’ என்னும் ஒரு கால்வாய் கெடிலத்துடன் வடகரையில் கலக்கிறது. இந்த இராகவன் வாய்க்கால், திருக்கோவலூருக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் பெண்ணையாற்றிலிருந்து பிரிந்து வழியிலுள்ள பல ஊர்களின் ஏரிகளையும் குளங்களையும் நிரப்பிக்கொண்டு இங்கே வந்து கெடிலத்தோடு கலக்கிறது. மலட்டாற்றினாலன்றி, இந்த இராகவன் வாய்க்காலாலும் பெண்ணையாற்றிற்கும் கெடிலத்திற்கும் தொடர்புள்ளமையை அறியலாம்.

அடுத்தபடியாக, திருவாமூருக்கு அண்மையில் கெடிலத்தின் தென்கரையில் வந்து கலக்கும் ‘நரியன் ஓடை’ என்னும் கால்வாய் மிகவும் இன்றியமையாதது. கெடிலத்துடன் கலக்கும் கால்வாய்களுக்குள் இதனை மிகப் பெரியது எனலாம். கூட்டடி,