பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழகம்

19


களையும் இடர் நேராமற்போற்றிக் காத்துப் படை வீரர்களுடன் மட்டும் போர் செய்யும் முறை பண்டைத் தமிழ் மக்களின் பேரறமாகக் கருதப்பட்டது [1]."

அறத்தின் வழியினைப் புலப்படுத்திப் பெரியார் சென்ற நெறிமுறையிலே தமிழ் நாட்டின் அரசியல் நிகழ்வதாயிற்று. அதனால், தமிழர் எத்தகைய இடையூறுமின்றி இனிது வாழ்ந்தனர். ‘தொண்டைமான் இளந்திரையனால் ஆளப்பெற்ற நிலப்பகுதியிலே வழிப் போவாரைக் கதறும் படி தாக்கி அவர்கள் கையிலுள்ள பொருள்களைப் பறித்துக்கொண்டு களவு செய்வார் இல்லை; அந்நாட்டில் இடியும் வீழ்வதில்லை ; பாம்பும் தீண்டி வருத்துவதில்லை; காட்டின்கண்ணுள்ள புலி முதலிய விலங்குகளும் பிறர்க்குத் துன்பஞ் செய்வதில்லை’, எனக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர் தொண்டைமானது செங்கோன்மையைப் பாராட்டுகின்றார் [2]

அரசனுக்குப் படைவீரர் உடம்பாகக் கருதி வளர்க்கப் பெற்றனர். ‘நின்னுடன் பழையதாய் முதிர்ந்த உயிரினும் அவ்வுயிருடனே கூடி முதிர்ந்த நின் உடம்பை யொத்த வாட்படை வீரர்’ எனப் பாண்டியனை நோக்கி,அவனுடைய படை மறவர்களைப் புலவரொருவர்


  1. புறம். 9
  2. ‘அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக்
      கைப்பொருள் வெளவுங் களவேர் வாழ்க்கைக்
      கொடியோர் இன்று அவன் கடியுடை வியன்புலம் ;
      உருமும் உரறாது ; அரவுந் தப்பாது ;
      காட்டு மாவும் உறுகண் செய்யா..?’

    -பெரும்பாணாற்றுப்படை, 39-48.

    .