பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழகம்

21

போயினான் கரிகால் வளவன் என்றும், அவ்வாற்றலாற் குறுகிலமன்னர்களையும் பெருநில வேந்தர்களையும் வென்றடக்கினான் என்றும், காடு கெடுத்து நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கினான் என்றும், தன் தலைநகராகிய உறையூரைப் பெருக்கிக் கோயிலொடு குடிகளே நிலைபெற அமைத்தான் என்றும் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கரிகாலனது நினைத்தது முடிக்குந் திறத்தை வியந்து போற்றுகின்றார்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவரை நோக்கி, ‘நீவிர் எம்மால் ஆளப்படும் நாட்டிலிருந்தும் எம்மை நினைப்பதில்லையே!' என அன்பினால் விணாவினான். அது கேட்ட புலவர், “பரந்த சேனைகளையுடைய அரசே, நீ சினந்து நோக்கும் பகைவர் நாடுகள் தீயாற்சுடப்பட்டு அழிகின்றன. நீ அருளுடன் நோக்கும் நண்பர் நாடுகள் பொன் விளையும் புது, வளம் பெறுகின்றன. நீயோ, வெம்மை மிக்க ஞாயிற்றினால் நிலவை உண்டாக்கிக்கொள்ள விரும்பினாலும், குளிர்ச்சி மிக்க சந்திரனால் வெயிலைப் பெற வேண்டினாலும் நீ விரும்பியதைச் செயற்கையினால் விளைவித்துக்கொள்ளும் எண்ணறிவுடையவனாய் விளங்குகின்றாய் ஆதலால், பரிசிலர் பலர் வெளி நாட்டிலிருந்தும் நின்னையே நினைக்கின்றனர், நாங்களோ, நின்னாற் பாதுகாக்கப்பெறும் இச்சோழநாட்டிற்பிறந்தமையால், என்றும் நினது அருள் நிழற்கண்ணே வளரும் இயல்புடையோம் இவ்வாறு நினது காவலில் வாழும் நாங்கள் நின்பால் வைத்த விருப்பத்தை வெளியிட்டுச் சொல்லவும் வேண்டுமோ [1].!” என அன்பினால் உளமுருகிக் கூறிய மறு-


  1. புறம் 38