பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் வாழ்வியல்

35

புறுவர் என்பதனை அக்காலத் தமிழ் வேந்தர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள்.

தமிழ் வேந்தர்கள் அமைத்த கோட்டைகளின் இயல்பு சங்க இலக்கியங்களிற் குறிக்கப்பட்டுளது. நகரங்களின் புறத்தே காவற்காடும், அதனை அடுத்து ஆழ்ந்த அகழியும், அதனைச் சார்ந்து வானளாவ ஓங்கிய மதிலும் அரண்களாகக் கொள்ளப்பட்டன. முற்றுகையிட்ட பகைவர் படையினை உள்ளிருந்து எய்தற்குரிய போர்க்கருவிகள், மதிலில் அமைக்கப்பட்டிருந்தன. கோட்டையின் சிறந்த பகுதி மதிலாகும். சுடுமண்ணாகிய செங்கற்களாற் சுண்ணாம்புச் சாந்திட்டு மதில்கள் கட்டப்பட்டன. அங்ஙனம் கட்டப்பட்ட மதில்கள் செம்பினாற் செய்தாற் போன்ற தோற்றமும் திண்மையுமுடையனவாய் அமைந்தன. புறத்தேயுள்ள பகைவர் காணாதபடி உள்ளிருப்பார் மறைந்து நின்று போர் செய்தற்குரிய அறைகள் மதிலில் அமைக்கப்பட்டிருந்தன. ‘ஞாயில்’ என்னும் பெயரால் இலக்கியங்களிற் சொல்லப்படுவன இவ்வறைகளேயாம். இவ்வறைகளில் நின்று வீரர்கள் செலுத்தும் அம்புகள் புறத்தே பகைவர் மேற்படும்படியாகவும், வெளியே நின்ற பகைவர் செலுத்துவன உள்ளே புகாதபடியும் உள்ளே அகன்றும் உயர்ந்தும் வெளியே குறுகித் தாழ்ந்தும் அமைந்த துளைகள் மதிலின்கண் அமைக்கப்பட்டன. இவற்றை ‘ஏப்புழை’ என்பர். (ஏ-அம்பு ; புழை - துளை. எப்புழை அம்பு செலுத்தும் துளை) செய்துகொள்ளப்பட்ட இவ்வரண்களேயன்றி, இயற்கையாய் அமைந்த மலைகளையும், காடுகளையும், கடத்தற்கரிய நீர் நிலைகளையும் பண்டைத் தமிழ் மக்கள் தங்கள் நாட்டிற்குரிய அரண்களாகக் கருதினார்கள். வேந்தரால் நன்கு மதிக்கப்பட்டு