பக்கம்:சாவின் முத்தம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

சாவின் முத்தம்

கரும்பைத்தான் சுவைக்கின்றார்! நான் உங்கட்
குக்
கருவேலம் பழந்தானே? முந்தா நாளே
வருவதாய்ச் சொன்னீர்கள். அன்பி ருந்தால்
மனதுக்கு இறகு முளைக் காதா!” என்றாள்.

‘குன்றுக்கும் சிரிப்புண்டு!’ என்றேன். “அத்தை,
கண்மூடி விட்டார்கள் அத்தான்” என்று
புன்னகையில் சொல்லிழுத்து, உதடு ஏறிப்
புதுப்பாடம் வாங்குகின்றாள்! அமுத வட்டம்
ஒன்று எழும்! அதில் விழிக்கும்ஈர முத்தம்!
‘உந்தும்மணி ஓடை,என்று இதழ்கள் சாய்க்கும்!
தின்றெடுத்தேன் வருவாயை அழகின் ஈடு
சீக்கிரத்தில் துள்ளிவந்து கணக்கில் சேரும்!

“வயிரத்தின் கிழிசலடி உதடு!” என்றேன்.
“வளர்கின்ற செந்தமிழை வாழ்த்த!” என்றாள்,
“பயிர்போன்ற மீள்விழியில் புறாக்கள்?” என்
றேன்.
“உயிர்ச்சேதி எடுத்துவரும் பாங்கி!” என்றாள்.
துயரத்தால்; சீழ்பிடிக்கும் மதத்தால்? குட்டைச்
செய்கைகளால் - தேய்ந்துவரும் எளியோர்
கூட்டம்
உயர்கின்றநாள் எந்நாள்? முத்துப் போலே
ஓர்சேதி காதலரே! என்றாள் கேட்டேன்!

“நடுஇரவுச் சிங்கத்தின் வலிமை, இந்த
நாட்டுக்கு மிகவுண்டு! நமது தோளின்