பக்கம்:சாவின் முத்தம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுடாத இரவு


மணிவரிக் கடல் உயிரின் விரிப்பில்
தாயின் உவகை வடிந்தது
***

நிலவு வடித்தது இன்பம் தென்றல்
உலவிக் கொண்டே உலுக்கிற்று மணத்தை!
***

சிலதி; மீனா; சித்திர லேகா;
நீலம்; குமுதம்; நிலாப்பூ; வஞ்சி;
வலக்கரம் போன்ற வண்ணக் குறிஞ்சி;
ஆடி தெளிந்து, அமுதம் திறந்து,
கிண்ணத் தாமரைக் குளத்தில் படியப்
பாடிக் கொண்டே பறந்தனர்!
குளிரி மீனின் கூர்வாய் போன்ற
முள்ளிச் செடியில், விரிந்த பூக்கள்,
கண்ணாடி நீரில் தன்முகம் பார்த்தன!
அல்லிகள் ஆடின் அழகிய பெண்களின்
ஒல்லி இடையின் ஒடிசல்; கூத்து
வழங்கிற்று! குளத்தின் ஒப்பந்த இளமையில்
இழைந்தன கரங்கள்! இங்கும் அங்கும்
தவ்வினர்! முகத்தைச் சந்தனப் பூவின்
ஒவ்வொரு இதழால் ஒதுக்கிக் கொண்டனர்;