பக்கம்:சாவின் முத்தம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாவின் முத்தம்

31

சிரித்துப் பின் சொல்வாள் "சீச்சி
சொல்லடி 'அணில்கள்' என்று!"
பெருத்ததோர் மலையை, மீனா
'பருப்பதம்' என்பாள்! நீல
'அரி என்பாள் சிலதி! சித்ரா'
'அலைகடல்' என அமைப்பாள்!

தேர்வு,கடத்தும் கண்களை அழைத்து
நீர்ப்பூ மேலே நிறுத்தினாள் குமுதம்
ஓடும் மீனை 'விடாதே' என்று
தேடுவாள் சிலதி சிரிப்பாள் மீனா!
உடும்பின் காக்கை ஒத்த கேசரம்
தொட்டுத் தேனேச் சுவைக்கும் வண்டை
அடிப்பாள் நீலம்! அலரிப் பூவில்
தடுக்கும் அலையைச் சீய்த்து, அழகை
அழுத்துவாள் தடத்தில் எழுவாள்
தாமரைத் தேனில் பார்வை கழுவி
நீரின் நிலையில் நின்று, தமது
ஊரின் சம்பவம் உருவி, பேச்சைப்
பலப்பல மாதிரி பறித்தனர்! நாவில்
கலைச்சொல் ஆக்கம் விழித்தது! கத்தி
விழிதயா ரித்த விளைச்சலில், விளக்குப்
புழுதி எழுந்து போனது எங்கும்!
சிரிப்பு கடந்தது திங்தமிழ் உதட்டின்
புரிகளேச் சிக்குப் படுத்தாத 'குறிஞ்சி'
பச்சையில் வைத்தாள் பார்வையை! 'வஞ்சியும்'
அச்சுப்போல் அங்கே அழுந்தினாள்!
வண்ணக் குறிஞ்சியின் வாடாக் குறிப்புகள்