பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

யென்றால் எவனாவது காவல் வீரனுக்குக் கடிதம் வாசிப்பவனாகவோ அல்லது கணக்கு எழுதிக்கொடுத்தோ தான் காலத்தைக் கழிக்க வேண்டும். இல்லாவிட்டால், எங்காவது தொலையிலுள்ள இடத்திற்குச் சென்று பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டியதுதான். இங்குள்ளவர்கள் நான் செத்துப்போய் விட்டதாக நினைத்துக் கொள்ளட்டும். நான் செலவாளியாக இருப்பதனால் இங்குள்ளவர்களுக்குப் பெரும் பாரமாக இருக்கிறேன். என்னால் செலவழிக்காமலும் இருக்க முடியவில்லை.

“நீங்கள் எனக்காக ஏதாவது சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இவ்வளவையும் சொல்லவில்லை. என் மனத்தில் இருக்கும் பாரத்தை இறக்குவதற்காகவே சொல்லுகிறேன். மறுபடியும் நான் உங்களிடம் இந்த விஷயங்களைக் கூறமாட்டேன்”

இந்தக் கடிதத்திலிருந்து அவன் கடைசி நாட்களில் பட்ட மன வேதனையை நாம் அப்படியே தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்த வறுமைக் காலத்திலே தான் மாக்கியவெல்லி தன் கவிதைகளையும் இன்பியல் நாடகங்களையும் எழுதினான். மாக்கியவெல்லி எழுதிய கவிதைகள் அப்படியொன்றும் உயர்ந்தவை அல்ல. ஆனால், அவன் தான் ஒரு கவிஞன் என்று பெயர் எடுப்பதிலேதான் மிகவும் ஆசையுள்ளவனாக இருந்தான்.

பிரான்செஸ்கோ டீ சாஸ்டிஸ் என்ற இத்தாலிய இலக்கிய விமரிசகன். பத்தொன்பதாவது நூற்றாண்டிலே மிகப் பிரசித்தி பெற்று விளங்கியவன். அவன் மாக்கியவெல்லியைப் பற்றித் தான் எழுதியுள்ள கட்டுரையின் ஆரம்பத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறான். ஓர்லாண்டோ பியூரியோசோ என்ற கவிதை நூல் வெளிவந்த சமயத்தில், மாக்கியவெல்லி ரோமில்தான் இருந்தான்.

கவிஞர் அரியோஸ்டோ எழுதியுள்ள அந்தக் கவிதை நூலின் கடைசிக் காண்டத்தில் இத்தாலியக் கவிஞர்களின் பெரிய பட்டியல் ஒன்றைச் சேர்த்திருக்கிறார். அதில் மாக்கியவெல்லியின் பெயரைச் சேர்க்காமல் விட்டுவிட்டது பற்றி மாக்கியவெல்லி குறை கூறினான். அந்தக் காலத்தில் -