பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

ஏன் எல்லாக் காலத்திற்குமே. மிக ஆற்றல் வாய்ந்த அரசியல் சிந்தனையாளனான மாக்கியவெல்லி தன் அரசியல் நூல்களைக் காட்டிலும் கவிதை நூல்களைக் கொண்டே பெருமையடைய வேண்டுமென்று எண்ணியிருந்தான்.

மாக்கியவெல்லி ரோமிலிருந்து பிளாரென்சுக்கு வந்த பிறகு இதைக் குறித்துத் தன் நண்பரும் கவிஞருமான லோடோ விக்சோ அலாமானிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறான். அந்தக் கடிதம் கீழ்வருமாறு:

கவிஞர் லோடோவிக்சோ அலாமானி அவர்களுக்கு,

பிளாரென்ஸ், டிசம்பர் 17, 1517.

என் மதிப்பிற்குரிய லோடோவிக்சோ,

"கடந்த சில நாட்களாக நான் கவிஞர் அரியோஸ்டோவின் ஓர்லாண்டோ பியூரியோசோ என்ற நூலைப் படித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் மொத்தத்தில் அது ஓர் அழகிய கவிதையே. ஒரு சில இடங்களில் மட்டும் அது முற்றும் பாராட்டக் கூடியதாயில்லை. நீங்கள் அவரை அங்கு ரோமாபுரியில் சந்தித்தால், என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள். என்னுடைய ஒரே ஒரு வருத்தம், அவர் தம்முடைய கவிதையில் எல்லாக் கவிஞர்களையும் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு என்னை மட்டும் ஒன்றுமில்லாதவன் போல் விட்டு விட்டாரே என்பதுதான், என்பதையும் தெரிவியுங்கள். ஓர்லாண்டோ கவிதை நூலில் அவர் எனக்குச் செய்த இந்தக் காரியத்தை என்னுடைய நூலில் அவருக்குச் செய்யமாட்டேன். இந்த விஷயத்தில் நான் கவனமாக இருப்பேன்”.

மாக்கியவெல்லி, கவிஞர் அரியோஸ்டோ தன்னைச் சிறப்பிக்காததற்காக வருத்தப்படுகிறானே தவிர, அவரைச் சிறப்பாகவே மதித்துப் பேசுகிறான் என்பது அவனுடைய இந்தக் கடிதத்திலிருந்து தெரிகிறது.

அவனுடைய இன்பியல் நாடகங்களிலே மிகச் சிறந்தது 'மன்ட்ர கோலா' என்ற நூல்.

ஆரம்பத்தில் கவிதைகளும் நாடகங்களும் எழுதி வந்த மாக்கியவெல்லி பிறகு நூல் எழுதுவதில் மும்முரமாக ஈடுபட்டான். அவன் வரும்படியில்லாமல் வறுமையில்