பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

உழன்று கொண்டிருந்த காலத்தில் மூன்று பெரிய நூல்களை எழுதி முடித்தான். அவை லீவியின் புத்தகங்களைப் பற்றி ஆராய்ச்சி, அரசன், போர்க்கலை என்பனவாகும்.

'அரசன்' என்னும் நூலை எழுதிய போது அதை அப்போது பிளாரென்ஸ் நகர ராஜ்யத்தின் அரசராயிருந்த மெடிசி குடும்பத்தைச் சேர்ந்த லாரென்சோவுக்குக் காணிக்கை செலுத்துவதற்காக ஒரு முன்னுரையும் . கூட எழுதியிருக்கிறான். அதைக் காணிக்கையாகச் செலுத்தினானா இல்லையா என்பது சரியாகத் தெரியவில்லை. பெரும்பாலும் காணிக்கை செலுத்தியிருக்க வேண்டும் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் மெடிசி அரசாங்கத்தினர் இவனுடைய வறுமையைக் கண்டு மனமிரங்கி ஏதாவது வேலை கொடுத்து ஆதரிக்க வேண்டும் என்பதற்காக, வருடாந்தர சம்பளமாக ஒரு சொற்பதொகையைப் பேசி பிளாரென்ஸ் நகர சரித்திரத்தை எழுதும்படி இவனைப் பணித்தார்கள். ராஜ்ய நிர்வாகத்தைச் சமாளிப்பது கஷ்டமாயிருந்த சமயத்தில், எப்படிப்பட்ட கொள்கையைப் பின்பற்ற வேண்டுமென்று இவனுடைய ஆலோசனையையும் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

குடியரசு முறையில் அரசாங்கத்தை மாற்றியமைக்க வேண்டுமென்று அவன் யோசனை கூறினான். அதற்காக ஓர் அரசியலமைப்புத் திட்டத்தையும் வகுத்தான். ஆனால், அவனுடைய யோசனை ஏற்றுக் கொள்ளப்படவுமில்லை; அவனுடைய திட்டம் அமுலுக்கு வரவுமில்லை.

1526-ஆம் ஆண்டில் பிளாரென்ஸ் நகரின் கோட்டை நிர்மாணத்தை மேற்பார்க்கும் வேலை அவனிடம் ஒப்படைக்கப்பட்டது.

1527-ஆம் ஆண்டில் குடியரசு வாதிகளின் கை மேலோங்கியது. முடியரசு ஆதிக்கத்திலிருந்து பிளாரென்ஸ் விடுதலையுற்றது. குடியரசு வாதிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் மாக்கியவெல்லியைத் திரும்பவும் அரசாங்கச் செயலாளர் பதவியில் நியமிக்க வேண்டுமென்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்தத் தீர்மானம் ஆதரிப்பாரில்லாமல் தோற்றுப் போய்விட்டது.

இந்நிகழ்ச்சி நடந்த சில வாரங்களுக்குப் பிறகு 1527ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதியன்று, பிற்காலத்தில் உலகப்