பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அவர்களைக் கெடுப்பது அரிது. அப்படியே கெடுத்து விட்டாலும் அதனால் ஏற்படும் பயன் சிறிது. ஏனெனில் அவர்களால் மக்களைத் தங்களோடு ஒன்று சேர்த்துக் கொண்டு வர முடியாது. ஆகவே துருக்கர்களை எதிர்க்க முயலுபவர்கள் யாராயிருந்தாலும், குழப்பமுண்டாக்கி வெற்றி பெற முடியாது. அவர்களுடைய படைத் தொகைகள் அத்தனையையும் எதிர்க்கக் கூடிய வல்லமையுடையவர்களாக இருக்க வேண்டும். ஆனால், போரில் வென்றுவிட்டால் அரசகுடும்பத்தைத் தவிர வேறு யாருக்கும் பயப்படத் தேவையில்லை. அந்த அரசகுடும்பத்தையும் அழித்துவிட்டால் வேறு எவ்விதமான பயமுமின்றி அந்த சாம்ராஜ்யம் முழுவதையும் அரசாளலாம்.

பிரெஞ்சு தேசத்தைப் போன்ற ராஜ்யங்களிலோ, அந்த ராஜ்யத்தைச் சேர்ந்த சில பிரபுக்களைச் சேர்த்துக் கொண்டு வெகு எளிதாக நாட்டில் வெற்றிக் கொடியை நாட்டி விடலாம். ஆனால், ஆட்சி நடத்தத் தொடங்குகின்றபோது தான் பல தொல்லைகள் ஏற்படத் தொடங்கும். உதவி செய்தவர்களிடமிருந்தும், எதிர்த்து நின்றவர்களிடமிருந்தும் இந்தத் தொல்லைகள் ஏற்படும். அரச குடும்பத்தை அடக்கி விடுவதால் மட்டும் தொல்லை தீர்ந்து விடாது. உதவி செய்த பிரபுக்களைத் திருப்தி செய்யவும் முடியாது: எதிர்த்து நின்ற பிரபுக்களை ஒழித்துக் கட்டவும் முடியாது! ராஜ்யத்தை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இழந்து விடும்படி தான் நேரிடும்!

ஆசியா முழுவதும் வெற்றிக்கொடி நாட்டி உலகப் புகழ்பெற்ற மாமன்னன் அலெக்சாண்டரின் டாரியஸ் அரசாங்கம் துருக்க ராஜ்யத்தைப் போன்றது. டாரியஸ் இறந்துபோனபடியால் அந்த அரசாங்கம் அலெக்சாண்டர் வசமே பத்திரமாக இருந்தது. அலெக்சாண்டர் இறந்த பின்னும் கூட அவருடைய பின் வாரிசுகள் அந்த ராஜ்யத்தைத் தம் வசத்திலேயே வைத்திருந்தார்கள். அவர்கள் மட்டும் ஒற்றுமையாக இருந்திருந்தால் அமைதியாக அந்த ராஜ்யத்தை நீடித்து ஆண்டிருக்கக் கூடும்.

மூன்று வழிகள் :

தங்கள் சொந்த நீதி முறைகளைக் கொண்டு சுதந்திரமாக வாழ்ந்து வந்த ராஜ்யங்களை ஆக்கிரமிக்க நேர்ந்தால், அவற்றை நிலையாக ஆளுவதற்கு மூன்று வழிகள்