பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

மேன்மக்கள் ஆதரவால் அரசனானவனைச் சுற்றி இருப்பவர்கள் அவனைத் தங்களுக்குச் சமதையானவனாகக் கருதுபவர்களாக இருப்பதால் அவன் அவர்களை ஏவவோ தான் விரும்புகிறபடி அவர்களுக்குக் கட்டளைகள் பிறப்பிக்கவோ முடியாது. ஆனால், குடிமக்களால் அரசனானவனுக்கு அடங்காதவர்கள் இருக்கமாட்டார்கள்; இருந்தாலும் வெகு சொற்பமாயிருப்பார்கள். தவிரவும். பிரபுக்களைத் திருப்திப் படுத்துவதைக் காட்டிலும் மக்களைத் திருப்திப்படுத்துவது சுலபம். பொது மக்கள் விரும்புவதெல்லாம் தாங்கள் ஒடுக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பது தான். பொது மக்கள் அரசரின் பகைவராயிருந்தால் அவனை விலக்க மட்டுமே நினைப்பார்கள். பிரபுக்களோ, தங்களுக்குப் பிடிக்காத அரசனுக்குப் பல சூழ்ச்சிகள் செய்வார்கள். அவர்கள் தந்திரத்திலும் முன்னறிவிலும் தேர்ந்தவர்களாகையால் தங்களுக்கு அனுசரணையாக வரக்கூடிய ஒருவன் பக்கம் மாறுவார்கள். மக்களுடன் அரசன் நிலைத்து இருக்க முடியும்; பிரபுக்களுடன் அது முடியாது பிரபுக்கள் எப்பொழுதும் தம் நலத்தையே நாடுபவர்கள் ஆகையால் அவர்களை இரகசியப் பகைவர்களாக எண்ணி அரசன் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மக்கள் ஆதரவால் அரசன் ஆனவன் அவர்களுடைய நட்பை எப்போதும் காப்பாற்ற வேண்டும். இது எளிது. ஏனெனில் அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் தாங்கள் அடக்கி ஒடுக்கப்படக் கூடாது என்பதுதான். பிரபுக்கள் ஆதரவுடைய அரசன் கூட மக்கள் ஆதரவைப் பெறுவது நல்லது. தங்களுக்குத் திமை செய்யக் கூடியவன் என்று எதிர்பார்க்கப்பட்டவன் நல்லவனாக இருப்பதைக் கண்டால் அவர்கள் அவனுக்குத் தங்கள் பேராதரவைக் காட்ட முன் வருவார்கள். எந்த அரசனும் மக்கள் நட்பைப் பெற வேண்டியது இன்றியமையாதது என்று நான் கூறுவேன். இல்லாவிட்டால் அவனுக்கு ஆபத்துக் காலத்தில் தஞ்சமடைவதற்கு ஓரிடமும் இருக்காது.

“மக்களை அடிப்படையாகக் கொண்டு எதையும் எழுப்புபவன் சேற்றின்மீது எழுப்புபவனாகிறான்”. என்ற பழமொழியை கொண்டு யாரும் என் வாதத்தை மறுக்க முயல வேண்டாம். தனிப்பட்ட மனிதர்களைப் பொறுத்தவரை அது சரிதான். தனிமனிதன் பகைவர் கையிலோ, அதிகாரிகள் கையிலோ அகப்பட்டால், பொதுமக்கள் தன்னை