பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44


கூலிப்படைகள் :

அரசு முறைகளைப்பற்றி ஆராய்ந்து விட்டோம். இப்போது அவை கையாளக் கூடிய படையெடுப்பு முறைகளைப் பற்றியும் பாதுகாப்பு வழிகளைப்பற்றியும் காண்போம். ஓர் அரசன் தன்னுடைய அடிப்படையைச் சரியாக அமைத்துக் கொள்ள வேண்டுமென்றும் இல்லாவிட்டால் அவனுக்கு நிச்சயம் அழிவு வரும் என்றும் நாம் முன்னரே தெரிந்து கொண்டிருக்கிறோம். எல்லா அரசாங்கங்களுக்கும் முக்கியமான அடிப்படைகள் நல்ல நீதிமுறைகளும் நல்ல படையமைப்பும் தாம். நல்ல படையமைப்பைப் பெறாத நாட்டில் நல்ல நீதிமுறை இருக்க முடியாது. நல்ல படையமைப்புள்ள நாட்டில் நல்ல நீதி முறைகள் இருக்கும். இப்போது நாம் படைகளைப் பற்றிப் பேசுவோம்.

ஓர் அரசன் தன் உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ள உபயோகிக்கின்ற படைகள் ஒன்று அவனுடைய சொந்தப் படைகளாயிருக்கவேண்டும் அல்லது கூலிப்படைகளாகவோ, உதவிப்படைகளாகவோ அல்லது எல்லாங்கலந்த கலப்புப் படைகளாகவோ இருக்க வேண்டும். கூலிப்படைகளும் உதவிப்படைகளும் பயனற்றவை மட்டுமல்ல ஆபத்தானவையும் கூட கூலிப்படைகளின் துணையை நாடுகிற அரசன் நிச்சயமாகவும் உறுதியாகவும் நிலைத்திருக்க முடியாது.

கூலிப் படைகளிடம் ஒற்றுமையிருப்பதில்லை. பேராசையே நிறைந்திருக்கும். இராணுவ ஒழுங்கு முறையிருக்காது. உண்மை விசுவாசம் இருக்காது. நேசப்படைகள் எதிரில் வீரங்காட்டும்; எதிரிப்படைகள் முன்னிலையில் கோழைத்தனத்தை நிலை நாட்டும். கடவுள் நம்பிக்கையும் இருப்பதில்லை. மனிதர்களுக்கும் நம்பிக்கையாக நடப்பதில்லை. படையெடுப்பை ஒத்திப்போடுகின்ற கால அளவுக்கே அழிவையும் ஒத்திப்போடலாமேயன்றி இவற்றால் ஒருவனுக்கு அழிவே நிச்சயம் உண்டாகும். அமைதிக் காலத்தில் இந்தக் கூலிப்படைகளாலும், போர்க்காலத்தில் எதிரிகளாலும் அரசன் சீரழிக்கப்படுகிறான். இதற்குக் காரணம் என்னவென்றால் அவர்கள் சம்பளத்திற்கு வேலை செய்கிறார்களேயன்றி நாட்டுப்பற்று, ராஜபக்தி ஆகிய வெற்றிக்காகவும் வேலை செய்வதில்லை. அந்தச் சம்பளம் அவர்களைத் தன் அரசனுக்காக உயிரைக் கொடுக்கக் கூடிய தன்மையைக் கொடுத்து விட முடியாது. போர்