பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

நடைபெறாதவரையிலே அவர்கள் அரசனிடம் வேலை பார்த்துக் கொண்டிருக்க விரும்புவார்கள். போர்வந்து விட்டாலோ ஓடி விடுவார்கள் அல்லது கலைந்து போய்விடுவார்கள்.

இந்தக் கூலிப்படைகளின் தலைவன் சாமர்த்திய முடையவனாயிருந்தாலும் கெடுதல், இல்லாவிட்டாலும் கெடுதல். அவன் சாமர்த்தியசாலியாயிருந்தால் அரசனையோ அல்லது அரசனுடைய நோக்கத்திற்கு மாறாக மற்றவர்களையோ அடக்கித் தன்னுடைய உயர்வையே நிலைநாட்டிக் கொள்ளவே எப்பொழுதும் முற்படுவான். சாமர்த்தியமில்லாதவனால் ஏற்படக் கூடிய தீமைகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. இந்தத் தீமைகளைத் தவிர்ப்பதற்கு நான் சொல்லக் கூடிய யோசனை என்னவென்றால், படை நடத்திச் செல்வதற்கு அரசனே நேரிற் போகவேண்டும். குடியரசாயிருந்தால், அந்தக் குடியரசு தன் சொந்தக் குடிமக்களையே நேரில் அனுப்ப வேண்டும். இப்படித் தாமே நேரில் சென்று, நடத்துகின்ற படைகளினால் தான் எந்த அரசாங்கமும் பெரிய முன்னேற்றத்தைக் காணமுடியும். கூலிப்படைகளால் கெடுதலைத் தவிர வேறு காணமுடியாது.

உதவிப் படைகள் :

ஓர் அரசன் தன் அருகாமையிலுள்ள ஒரு வல்லமை மிக்க அரசனைப் படைகளுடன் வந்து தன் நாட்டைக் காக்கும்படி கேட்டுக் கொண்டால், அப்படி வரும் படைகளுக்கு உதவிப்படைகள் என்று பெயர். இந்த உதவிப்படைகள் கூலிப் படைகளைப் போலவே பயனற்றவை. இந்தப் படைகள் தங்களைப் பொறுத்தவரையில் நல்லவையே. ஆனால், அவற்றின் உதவியை நாடுகிறவனுக்கு எப்போதும் ஆபத்தானவை. போரில் அவை பின் வாங்கினால், உதவி பெற்றபின் தோற்க நேரிடும்; போரில் அவை வெற்றி பெற்றாலோ, உதவி பெற்றவன் அவற்றிடம் சிறைப்பட்டுவிட நேரிடும்.

ஆகவே எந்த வகையிலும் தான் வெற்றியடைய வேண்டாமென்று நினைக்கக்கூடியவர் தான் இந்தப்படைகளின் உதவியை நாடவேண்டும். இந்தப்படைகள் கூலிப்படைகளைக் காட்டிலும் கொடுமையான ஆபத்துடையவை. இவை என்றும் ஒன்று சேர்ந்து ஒரே தன்மையில் இயங்கக்கூடிய படைகள்