பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

சிரிப்பதிகாரம்


விடப் பெரிதான கம்மல்! விமானத்தைவிடப் பெரிதான என்ஜின்! இவைகளைப் போல், புத்தகத்தில் அடங்கிய விஷயத்தை விடப் பெரிதான முன்னுரைகள் எல்லாம், ரசிகர்களைக் காக்காய்ப் பிடிக்கும் முயற்சிகளின் விளைவுகள் தானே அய்யா! காக்காய்ப் பிடிக்கும் தொழிலைச் சிலர் கொஞ்சம் மறைவாகச் செய்வார்கள், சிலர் வெளிப் படையாகச் செய்கிறார்கள்!

பிரத்தியட்ச உண்மையான இந்தக் காக்காய்ப் பிடிக்கும் கலையைப்பற்றி, பகிரங்கமாகவே உங்களுக்குச் சொல்லி விட்டு, உங்கள் முழுச் சம்மதத்தைப் பெற்ற பிறகே, இந்த உத்தியைச் செய்கிறோம். ஆகவே இதில் ஏமாற்றுதலும் இல்லை - ஏமாறுவதும் இல்லை. இது ஒரு சமுதாய தர்மம்! இந்த அறத்தை நானும் நம்பித் தொலைக்கிறேன். ஆக, தர்மமும் ஒரு பக்கம் வாழ்கிறது. நம் காக்கையும் ஒரு பக்கம் பறக்கிறது, என்று நிம்மதி கொள்ளலாமே! மேலும் ஆயிரமுகத்தான் அகன்றதாயினும் பாயிரமல்லது பனுவல் அல்லவே! ஆகவே பாயிரத்தை ஆயிரம் வார்த்தைக்குள்ளே அடக்குகிறோம்.

மற்றும் ஒரு செய்தியை மறக்காமல் கூறிக் கொள்வேன். கூறிக்கொள்வேன் என்ன? அவசியம் கூறிக் கொள்ளத்தான் வேண்டும். அதாவது நாட்டில் எங்கு பார்த்தாலும் ஆங்காங்கு பட்டிமன்றங்கள் நடைபெறுகின்றன. சாதாரண குட்டி மண்டபங்களில் சொல்லாத அரிய பொருள்களை எல்லாம் பட்டி மன்றங்களில் பளிச்சென விளக்குகிறார்கள். இன்று எல்லாவித நிகழ்ச்சிகளிலும் பட்டி மன்றம் இடம் பெறுகிறது. ஏதாவது ஒரு மேடை கிடைத்தால் போதும், உடனே ஒரு பட்டி மன்றம் தோன்றிவிடும்! இன்னும் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் இந்தப் பட்டி மன்றம் படையெடுக்கவில்லை.

அதாவது திருமண மண்டபங்களில் புலவர்கள் ஒன்று சேர்ந்து, எது பெரிது? இல்லறமா? துறவறமா? பெண்ணா - மாப்பிள்ளையா? ஆண்மையா - பெண்மையா? உத்தியோகம் பார்க்கும் பெண்ணா? - வேலை கிடைக்காத ஆணா? காதலா