பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காதல் செடியும்
கல்யாண இடியும்

(ஒரு சிறு நாடகம்)



காட்சி – 1

இடம் : பேயின் தனி இடம்

காலம் : பகல்

(பேபி ஒரு புது அலை - ராணி அந்த அலையைப் புரட்டும் தென்றல்)


(பேபியும் ராணியும் சேர்ந்து பாடுகிறார்கள்)

மோட்டாருக்கு பேட்டரிபோல மனசுக்கு வேணும் காதல்
மாட்டை ஒட்டும் சாட்டைபோல மனுசனை ஆட்டுது காதல்
பூட்டிய குதிரை கடிவாளம் போல் பெண்ணை ஆட்டுது காதல் நம்
பாட்டன் பாட்டியின் பரிகாசத்தில் பல்லைக் காட்டுது காதல்
ராக்கெட் வேகம் குறிதவறாது ரிம்மோட் கன்ட்ரோல் காதல்
பாக்கெட் நிறையப் பணமிருந்தாலே போயிங் ப்ளேன்தான் காதல்
வட்டி இல்லாமல் வாங்கியகடனே வாழ்வில் காதல் காதல்
இஷ்டப்பட்டே இருவரும் ஒன்றாய்க் கட்டப்படுவது காதல்
இட்லியும் கார சாம்பாரும்போல் என்பசி தீர்ப்பது காதல்
கட்டுக்கடங்கா வாலிபநதியில், கட்டும் அணையே காதல்.

(பாட்டு முடிந்ததும்)

பேபி : எப்படி ராணி என் நடிப்பு?

ராணி : என் நடிப்பு எப்படி? இனிமேல் என்னை ராணி

என்று கூப்பிட வேண்டாம் பேபி, லைலா என்று
கூப்பிடு, ஆ!என் மஜ்னு.
(மண்டியிட்டு நடித்தல்)