பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

சிரிப்பதிகாரம்



பேபி : அடே கிழவா ஒல்ட்மேன்! என்னப்பாயிது! சுத்த

முட்டாளாயிருக்கியே. கலையின் பெருமையைப்
பற்றி கடுகளவாவது உனக்குத் தெரிந்திருந்தால்
இப்படிக் கஷ்டம் கொடுத்திருப்பாயாடா
காட்டேரி (சாமி சிரிக்கிறான்) சிரிக்காதே. இது
கோபம்!

சாமி : என்ன பேபியிது! கானாவிலே ஆரம்பிச்சு

கடைசி வரையிலும் கன்னாபின்னான்னு, கங்கு கரையில்லாமே,
கவியா அளந்து கொட்டறே?

பேபி : மோனை தவறாது மொழியும் முத்தமிழ்ச் சிங்கம்!

அழகின் எழிலன்! அகராதித் தமிழன்! ஆனந்த
மோகன்! இந்த பேபியின் ஹாபி நாடகம்!
அதைக் கெடுத்துவிட்டாய் நீ பாபி!

சாமி : என்னைப் போல அன்னக் காவடிக்கு உன்

அடுக்குத் தொடர் விளங்காது பேபி, சும்மா
எப்பவும் போல தமிழ்லேயே பேசு. ஆமாம்.
இதெல்லாம் என்னப்பா ஒரே தாடி மயமாயிருக்குது.

பேபி : அடே ஒல்ட்மேன்! இந்தத் தாடியின் மகிமையைப்

பற்றி உனக்கென்னடா தெரியும்?

சாமி : எனக்கும் கொஞ்சம் தெரியும் பேபி. இந்தத் தாடி

இல்லாமலிருந்தா அந்த சாட்சாத் முருகப்
பெருமான், அந்தக் குறவள்ளியைக் கல்யாணம்
செஞ்சுட்டிருக்க முடியாது. இந்தப் பாழாப்
போன தாடி இல்லாட்டி நம்ம நாட்டிலே மதச்
சண்டையே இருந்திருக்காது. இது மாத்திரமா
இந்தத் தாடி இல்லாட்டி பல போலிப்
பண்டாரங்களெல்லாம் பெரிய மனுஷன் போல
பேசமுடியுமா இந்த நாட்டிலே! எல்லாம் இந்தத்
தாடியின் மகத்துவம் தானே பேபி.
(ராணி வருகிறாள்)