பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

சிரிப்பதிகாரம்



பாரேன். அது சரிங்க. நீங்க சமரஸ வியாதி,
இவர் என்னா வியாதி? சம்சார வியாதியா?

பேபி : வியாதியாவது வெண்டைக்காயாவது நாடகத்திலே

இவர்தான் கதாநாயகியா வரப்போகிறார்!

சாமி : என்னா எளவு, இவரா! தாடியுங்கீடியுமா இருக்கு!

பேபி : தாடி! இது ஒரு மீடியம் ஆப் லவ், ஹிப்பியுகச்

சுப்பிகளிடம் உப்பியிருக்கும் காதல். எங்க ராஜா
ஆக்ட் பண்ணினால், பெண்களெல்லாம் பிச்சை
வாங்கணும். பார் ஆக்ட் பண்றோம். நீயே
பாரேன். உம், ராஜா, கமான்... ஆ... மை-டியர் டிலைலா!

ராணி : ஓ! மை ஸ்வீட் ஸாம்ஸன்!

சாமி : உம்... பேஷ் பேஷ் காதல் கட்டம் கனஜோராயிருக்குதே!

பேபி : ஆம்! காதலென்பது தொட்டதும் கெட்டுப்

போகும் ஊறுகாயல்ல. அது வெட்ட வெட்ட
ஊறும் அமுத ஊற்று. சாமி! காதலென்னும்
ஜீவநதி உற்பத்தியாகும் இடம் எது தெரியுமா!

சாமி : எது? காலேஜ் கட்டிடங்களா?

பேபி : நீ ஒரு முட்டாள். தியாகமென்னும் மலையில்

தான் ப்ரேமை அருவி பொங்கி எழுகிறது.
காதலுக்காக உலகம் உயிரைவிட வேண்டும். அது
ஒரு கலை.

சாமி : ஓகோ உயிரை விடறத்துக்குத்தான் கலைன்னு

பேரா? இந்தக் கலை வளர்ந்தா உலகத்திலே
ஜனத்தொகை குறையும்!

பேபி : ஆம்! அந்தக் கலையை உலகுக்குப் பரப்ப

வேண்டும். காதல், தியாகம், கலை இதுவே என்
லட்சியம். இதற்காக மஜ்னுவைப் போல் மடிய
வேண்டுமா? ரோமியோவைப் போல் சாக