பக்கம்:சிரிப்பதிகாரம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் ; 43

பேபி

சாமி

பேபி

சாமி

பேபி

சாமி

பேபி

சாமி

போடா இடியட், கொல்லுவேன் உன்னை! பாஸ் பண்ணி விட்டேனாம் பாஸ்! கேலி பண்றியா? நீ என்னடா சொல்றது? சாட்சாத் வைஸ் சான்ஸ்லரே வந்து சொன்னால்கூட நான் நம்ப மாட்டேண்டா பாஸாம் பாஸ் அவுட் பாஸ்தான்!

என்னப்பா பாஸுன்னு சொன்னா, மத்த பையன்கள் எல்லாம், கல்கண்டு வாங்கித் தர்றாங்க. நீ என்னடான்னா சண்டைக்கு வர்ரே. கவலைப்படறே, கண்ணிர் விட்றே. கள்ளு போட்றே! ஆமாம் மற்றவனுக்கு பாஸாகறதுனாலே லாபமிருக்கு. நான் பெயில் ஆனாதானேடா என் காரியம் நிறைவேறும்.

.இதோ உன் நம்பர் 383 ஆகா! என்ன மங்கள

கரமான நம்பர் உனக்குன்னு வந்து வாச்சிருக்கு பாரு ஒரே எட்டும் மூணும்! ஆ! எந்த மடையண்டா எனக்கு பாஸ் மார்க் போட்டது! -

உங்கப்பாவின் ஏற்பாடு பேபி!

அப்பா - அவர் ஒரு முட்டாள்! அடே சாமி! பாஸானா மட்டும் என்ன? நான் அந்த வாணியைக் கல்யாணம் செய்து கொள்ளவே மாட்டேன். நீ போடா - நான் வருகிறேன். போடா ஆசாமி! எல்லாம் சதி செய்து என் லட்சியத்தை நாசமாக்குகிறீர்கள்! கேவலம் இந்த சோதனை என்னை என்னடா செய்யும்? பாஸ் என்று சர்டிபிகேட் வந்துட்டா பயப்படுவேனோ? நச்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டும் போதிலும் அச்சமில்லை. அச்சமில்லை!

அச்சமென்பதில்லையே!