பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவன் புறக்கணிப்பதைப் பார். தன் கருத்துதான் சரி என்று அவன் நினைப்பதைப் பார். தற்பெருமையும், தற்செருக்கும் கொண்டு எப்போதும் நடந்து கொள்வதைக் கவனி.

இறுதியில் அவன் மற்றவர்களின் பாராட்டுகளில் மயங்கி, அவர்களுக்கு இவன் இரையாவதையும் தெரிந்துகொள்.

நடைமுறைப்படுத்துதல்

கடந்த காலம் மீண்டும் வராது; உன்னுடைய எதிர்காலமும் உறுதியானதில்லை; மறைந்த நாள்களை நினைத்து வருந்த வேண்டா. எதிர்காலம் பற்றியும் அதிக நம்பிக்கை கொள்ள வேண்டா. முயற்சியில் மட்டும் முனைப்பாய் இரு.

நீ இப்போது எப்படி நடந்து கொள்கிறாயோ அதைப் பொருத்துத்தான் உன் எதிர்காலமும் அமையும். எனவே இப்போது நடப்பதுதான் உனக்கு உறுதியான காலம். எதிர்காலத்தின் கருவில் இருப்பதுதான் உன் வருங்காலம். அது உனக்கு எப்படி அமையப் போகிறது என்பதை நீ அறிய முடியாது.

வருங்காலத்தில் அமையக்கட்டிய தெல்லாம் நீ இந்தக் காலத்தில் அமைத்துக் கொண்டதைப் பொருத்ததாகும். எனவே, இந்த நிகழ் காலத்திலேயே உன் எதிர்காலத்தை அமைத்துக் கொண்டு