பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

யமையாத தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே இயலாது தவிப்பான்.

மற்றவர்களின் பட்டறிவுகளைக் கொண்டு நீ அறிவைக் கொள்முதல் செய்து கொள். உன்னிடம் உள்ள குற்றம் குறைகளைத் திருத்தி அமைத்துக் கொள்.

எவரையும் உடனே நம்பி விடாதே. ஆய்ந்து செய்திடு. காரணமின்றி எவரிடமும் நம்பிக்கையின்மையைக் கைக் கொள்ளாதே.

ஒரு நேர்மையானவனின் நட்பு கிடைத்து விட்டால், அது உனக்குக் கிடைத்திட்ட புதையல் என்று மதித்திடு. அவன் ஒரு விலை மதிக்க முடியாத பொன் சுரங்கம்.

பணத்திற்காகப் பாடுபடுபவர்களிடம் தயவை எதிர்பார்க்கக் கூடாது. உன் பணம் தீரும்வரை அவர்களை நீ விலக்கிக் கொள்ள முடியாது.

நாளைக்கு வேண்டும் என்பதை இன்றே செல விட்டு விடாதே.

உனக்கு உறுதியாக வெற்றி கிடைக்கும் என்றோ, நல்லதேதான் கிட்டும் என்றோ முன் முடிவை மேற்கொண்டு விடாதே. இரவில் என்ன நேரும் என்பதைப் பகலில் மனிதன் ஊகிக்க இயலாது.

முட்டாள்களுக்கு நல்ல காலம் உண்டு. அறிவாளிகளுக்கும் தோல்வி ஏற்படுவதுண்டு.