பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

29



ஆனால், நீ சிந்தித்துத் தெளிவு பெறாமல் உள்ளே சென்று விடாதே. அந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து போகிறவர்களுடன் பழகாதே.

அவர்கள் மன மகிழ்ச்சியோடு இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்வர். ஆனால், அவர்களின் செயல்கள் அறிவற்றவர் செயல்கள்; தவறான செயல்கள்; அவர்களின் போக்குக் கேட்டி லேயே முடியும். அவர்களிடம் மறைந்து வளர்வது துன்பந்தான்.

இப்போது பெண்களின் நிலையைப் பற்றி சிந்திப்போம். தகாத வாழ்வு வாழ்ந்து கூடாத முறையில் வாழ்ந்தவர்கள் அமைதியாக வாழ்வதில்லை. பலர் அல்லலைத் தாங்க முடியாது அழுகிறார்கள். அவர்களின் மதிகெட்ட செயலின் காரணமாகப் பெண்கள் இரவும் பகலும் புலம்பும் நிலையை அடைகிறார்கள்.

அப்படிப்பட்ட பெண்கள் இருக்கும் இடத்தில்கால் எடுத்து வைக்காதே. அவளுடைய மூச்சு உன்மீது பட்டாலே உனக்கும் தொத்து நோய் பற்றிவிடும். அவர்களைக் கனி என்று நம்பி சுவைத்தால், உன் வாழ்வின் மலர்கள் உதிர்ந்துவிடும். முழு நிறைவுடன் நீ நல்லபடி வாழ வேண்டுமானால் அந்த ஊனை விற்று உயிர் வளர்த்துக் கொள்ளும் ஊர் எச்சிலை நாடாதே. இது ஒரு சமூகக் கொடுமை.