பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

37

மிக்க மகிழ்ச்சி கொள்வாள். எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், யார் செய்திட வேண்டும் என்பதை மிக்க அக்கறையுடன் சிந்தித்துத் செயல்படுவாள். எதையும் அளவோடு, சிக்கனமாகச் சிறப்பாகச் செய்திடுவாள்.

அவள் குடும்பத்தைக் கட்டிக் காக்கும் திறமையைக் கண்டு கணவன் மகிழ்வான். எல்லோரும் அவளைப் பாராட்டுவதைக் கேட்டு மகிழ்வாள். பெற்ற குழந்தைகளுக்கு நல்லறிவு புகட்டி வளர்ப்பாள். தன்னைப் போல குழந்தைகளையும் நல்லவர்களாக வளர்த்திடுவாள்.

அவள் எதைக் கூறினாலும் சிறியவர்கள் பணிந்து நடப்பார்கள். அவள் கண்ணசைவைக் காட்டினாலே காரியங்கள் ஒழுங்காக நடத்திடும்.

அவள் கட்டளையை நிறைவேற்றப் பணி யாளர்கள் துடித்து ஓடுவர். அவள் எதைச் சுட்டிக் காட்டினாலும் அதைப் புரிந்து கொண்டு எல்லோரும் நடப்பார்கள். அவளுள்ளத்தில் எப்போதும் அன்பு குடிகொண்டிருக்கும். செல்வ மிகுதியால் உந்தப்பட்டு எதையும் தவறாகச் செய்திடமாட்டாள். வறுமைத் தொல்லைகள் வரும் போது உறுதியாக நின்று பொறுமையுடன் செயலாற்றிக் குடும்பத்தைக் காத்திடுவாள்.

கணவன் குழப்பத்திலும், தொல்லைகளிலும் துயரப்படும்போது அவள் துணையாக நின்று,