பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

தக்க காரணம் ஏதும் இல்லாதபோது மனைவியிடம் உன் எதிர்ப்பையோ, சினத்தையோ காட்டிக் கொள்ளாதே. உன் இன்ப துன்பங்களில் அவளுக்கும் உரிய பங்கினைக் கொடுத்துவிடு.

அப்படியே உன் மனைவி தவறுகள் செய்ய நேர்ந்துவிட்டாலும் நல்லறிவு புகட்டித் திருத்த முற்படு. எந்தக் காரணத்தைக் கொண்டும், வலுக்கட்டாயமாக எதையும் செய்திடக் கட்டாயப் படுத்தாதே.

அவள் உன் படுக்கையின் பங்காளி; அவளுக்கு இரண்டகம் நினைக்காதே. அவள் உன் குழந்தைகளுக்குத் தாய்; உன் உடலின் உயிர்-அதை மறந்துவிடாதே!

அவளிடம் எதையும் மறைக்காதே. நீ நன்றாக வாழ வேண்டும் என்ற ஆசையால், பல அறிவுரைகளை அவளும் கூறவேண்டி வரும். நீ அவளின் உள்ளத் தூய்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அவள் பிணியால் பீடிக்கப்பட்டாலும், வலியால் துடித்தாலும், நீதான் அவளுக்கு அன்போடு துணை நின்று தேற்றவேண்டும். உன் அன்பான பார்வையே அவளுக்கு மா மருந்து அதுவே, அவளின் வலியைக் குறைத்து விடும் அல்லலை அகற்றிவிடும்.

பெண் இனத்தின் உடல் அமைப்பும் மெல்லிய உறுப்புகளின் அமைப்பும், கருத்தில்