பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

43

மாற்றிடு. எல்லோருடைய அன்பையும் மதிப்பையும் பெற்றிடுவான்.

தெளிவான சிந்தனை உடையவனாக மகன் இருந்தால், அவன் உடல் நலத்தை நன்கு பாது காத்துக் கொள்வான். எதிலும் முன் எச்சரிக்கையுடன் நடக்கும்படி வளர்த்தால் அவன் பிற்காலத்தில் பல நன்மைகளை அடைவான்.

அறத்துக்கும் ஒழுக்கத்திற்கும் மதிப்பளிக்க மகனுக்குக் கற்றுக் கொடு. உலகமே அவனைப் பாராட்டும்

எதிலும் விழிப்போடும், சுறுசுறுப்புடனும் செயலாற்றக் கற்றுக் கொடு. அவனிடம் செல்வம் குவியும். வாழ்வில் உயர்வை அடைவான்.

மகனுக்கு அறிவியல், இலக்கியம் கற்றுக் கொடு. அவை அவனுக்குப் பயன் தரும்.

உலக அறிவைக் கொடு. அவன் இறப்பு மகிழ்ச்சியாக இருக்கும்.

மகன்

இயற்கை எத்தனையோ உயிரினங்களைப் படைத்துள்ளது. ஆனால், மனிதன் அவற்றை எல்லாம் கண்டு தெரிந்து கொள்ள வேண்டியவை, பல உள்ளன. அப்படி மற்ற உயிரிகளிடம் பெற்றுக் கொண்டதை மனிதன் தன் வாழ்வில் கடைப்பிடித்திட வேண்டும்.