பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

வாணிகமே ஆகும். இங்ங்னம் அரசபோகத்தில்: வாழ்ந்த வணிகருள் இருவர் பெயர் பெற்றவராக இருந்தனர். ஒருவன் மாசாத்துவான் என்பவன்; மற்றவன் மாநாய்கன் என்பவன் மாசாத்துவான் என்பவனுக்குக் கோவலன் என்பவன். தவமகனாக விளங்கினான். மாநாய்கன் என்பவனுக்குக் கண்ணகி என்பவள் தவமகளாக விளங்கினாள்.

கோவலன்

கோவலன் இளமைதொட்டே நற்குண நற்செயல்களிற் சிறந்து விளங்கினான். அவன் தன் காலத்துத் தமிழ் நூல்கள் பலவற்றைத் தக்க ஆசிரி. யரிடம் பயின்றான்! வாணிகத் துறைக்குரிய கல்வியையும் வளமுறக் கற்றான்; தந்தைக்கு உதவியாக இருந்து வாணிகத்தைப் பெருக்கி வந்தான். ஏழைகளைக் காக்கும் இயல்பு அவனிடம் இளமை முதலே குடி கொண்டிருந்தது. செல்வத்திலும், கல்வியிலும் ஒழுக்கத்திலும் ஒருங்கே குறப்புப் பெற்று இருந்த அவன், அறிஞரது பெருமதிப்புக்கு உரியவன் ஆனான்.

கண்ணகி

கண்ணகி இரதிதேவியும் பார்த்துப் பொறாமை படத்தக்க பேரழகி அவள் முகம் அன்று மலர்ந்த தாமரை மலர் போலப் பொலிவு பெற்று விளங்கியது. சிவந்த ரேகைகள் படர்ந்த அவள் கண்கள் அகன்று இருந்தன. அவள் புருவங்கள் வில்லைப் போல வளைந்து இருந்தன. அவள் பற்கள் ஒரே வகையும் ஒரே அளவும் உடைய முத்துக்களை ஒத்திருந்தன. அவளுடைய கரிய நீண்ட கூந்தல்,