பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

நடனம் பயிற்றுவிக்க நடன ஆசிரியர் பலர் இருந்தனர்; இசையைக் கற்பிக்க இசை ஆசிரியர் பலர் இருத்தனர். இந்தப் பலவகைக் கலைகளைப் போதிக்கும் ஆசிரியர்கள் பரம்பரையாகவே இக் கலைகளில் பண்பட்ட புலமை பெற்றவர் ஆவர்.

சித்திராபதி

பூம்புகாரில் கணிகையர் தெருக்கள் சில இருந்தன. அவற்றில் ஒன்று முதல்தர நாடகக் கணிகையர் தெருவாகும். அத்தெருவில் இருந்த கணிகையருள் புகழ்பெற்று இருந்தவள் சித்திராபதி என்பவள். அவள் ஆடல் பாடல்களில் வல்லவள்; அவற்றில் நீண்ட காலம் பயிற்சி உடையவள், சாத்திர முறையில் அணுவளவேனும் தவறாதபடி நடிக்க வல்லவள். அவள் நடனத்தைப் பார்க்க பூம்புகார் மக்கள் பெருங் கூட்டமாகக் கூடுவர். அவளைப் பற்றி சோழ நாடு முழுவதிலும் இருந்த மக்கள் நன்கு அறிந்திருந்தனர். சோழ அரசன் அவளது நடனத் திறனைப் பல முறை பாராட்டி மகிழ்ந் தான.

மாதவி

இவ்வாறு ஈடும் எடுப்பும் அற்ற நடிக மாதாக விளங்கிய சித்திராபதிக்குத் தவமகள் ஒருத்தி இருந்தாள். அவள் பெயர் மாதவி என்பது. அவள் தன்னைப் போல நடனக் கலையில் பெரும் புலமை பெறவேண்டும் என்பது சித்திராபதியின் விருப்பம். அதனால், அவள் பண்பட்ட நடன ஆசிரியரை வைத்து மாதவிக்கு நடனப் பயிற்சி அளிக்கத் தொடங்கினாள். இப்பயிற்சி மாதவியின் ஐந்தாம் வயதிலிருந்தே தொடக்கம் ஆயிற்று. மாதவி ஏழு ஆண்டுகள் பயிற்சி பெற்றாள்; நடனக் கலைத்-