பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

கண்ணகியைப் புகழ்தல்

அப்பொழுது துர்க்கை அம்மனுக்கு மறவர் பலியிட்டு வழிபட்டனர். அங்குத் தெய்வம் ஏறிய ஒருத்தி, கண்ணகியைச் சுட்டி, “இவள் கொங்கச் செல்வி; குடமலையாட்டி; தென் தமிழ்ப்பாவை: செய்தவக் கொழுந்து; உலகிற்கு ஒரு மாமணியாய் ஓங்கிய திருமாமணி’ எனக் கூறினாள். கண்ணகி அப்புகழுரைக்கு நாணிக் கணவன் பின் சென்று நின்றாள்.

கெளசிகன் துாது

பின்னர் மூவரும் அக்கோவிலை விட்டு புறப் பட்டு வழி நடந்தனர்; வழியில் மறையவர் வாழ்பதியில் தங்கினர். கோவலன் இருவருக்கும் தண்ணிர் கொண்டு வரப் போனான். அங்குக் கெளசிகன் என்ற பார்ப்பனன் எதிர்ப்பட்டு, “நின் பிரிவால நின் பெற்றோரும் சுற்றத்தவரும் பெருந்துயர் உறுகின்றனர்; நின் பிரிவினால் மாதவி நோய்வாய்ப்பட்டுக் கிடக்கின்றாள்; நினக்கு இக்கடிதம் எழுதிக் கொடுத்தாள்” என்று கூறிக் கடிதம் தந்தான். கோவலன் அக்கடிதத்தைப் பிரித்துப் படித்தான்: அக்கடிதம் காதலி காதல னுக்கு எழுதுவது போலவும் மகன் பெற்றோர்க்கு எழுதுவது போலவும் பொதுப்பட அமைந் திருநதது. அதனால் கோவலன் அதனைத்தான் எழுதியதாகக் கூறித் தன் பெற்றோரிடம் தருமாறு வேண்டி அகன்றான்.

புறஞ்சேரியில் தங்குதல்

பிறகு கோவலன் முதலிய மூவரும் வழிநடந்து பீடுமிக்க மாட மதுரையை நெருங்கினர்; நெருங்கிசி-3